உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஞ்சாபில் பஸ் இயங்காததால் பாதிப்பு : உ.பி.,யிலும் விவசாயிகள் போராட்டம்

பஞ்சாபில் பஸ் இயங்காததால் பாதிப்பு : உ.பி.,யிலும் விவசாயிகள் போராட்டம்

அமிர்தசரஸ், விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய சங்கங்கள் சார்பில், நேற்று நடந்த, 'பாரத் பந்த்' எனப்படும் முழு அடைப்பு போராட்டத்தால், பஞ்சாபில் பஸ்கள் இயங்காததால் பொது மக்கள் அவதியடைந்தனர். இதே போல், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்திலும் போராட்டங்கள் நடந்தன.விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டில்லி முற்றுகை போராட்டத்தை, பஞ்சாப், ஹரியானா, உ.பி., ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நடத்தி வருகின்றனர். டில்லியின் எல்லைகள் அடைக்கப்பட்டு தடுப்புகள் போடப்பட்டுள்ளதால், எல்லைகளுக்கு அருகே விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில், 'சம்யுக்தா கிசான் மோர்ச்சா' என்ற விவசாய சங்கம், நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு பஞ்சாப், உ.பி., - ஹரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பஞ்சாபில் நேற்று பஸ்கள் இயங்கவில்லை. தனியார் பஸ்களும் இயங்காததால் பொது மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். பஞ்சாபின் பல்வேறு இடங்களில், சந்தைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டிருந்தன. பதான்கோட், டர்ன் தரன், பதிண்டா, ஜலந்தர் ஆகிய இடங்களில், தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து விவசாயிகள் போராடினர்.ஹரியானாவில் உள்ள பல்வேறு சுங்கச்சாவடிகளில், விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து முடங்கியது. உ.பி.,யின் சில பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன. முசாபர் நகரில் நடந்த போராட்டத்தில், பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் பங்கேற்றார்.

மீண்டும் பேச்சு

விவசாய சங்கப் பிரதிநிதிகளை, மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, பியுஷ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோர், சண்டிகரில் நேற்று முன்தினம் இரவு சந்தித்து மூன்றாவது முறையாக பேச்சு நடத்தினர். இதில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் பங்கேற்றார். ஐந்து மணி நேரத்துக்கும் மேல் நடந்த பேச்சில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், நாளை மீண்டும் விவசாயிகளை சந்தித்து பேச மத்திய அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர். விவசாய சங்கத்தினர் அடிக்கடி தங்கள் கோரிக்கைகளை மாற்றுவதால், பேச்சில் தொடர்ந்து முட்டுக்கட்டை நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ram
பிப் 17, 2024 10:41

இந்த போராட்டம் இந்தியாவுக்கு எதிராக சண்டையை ஆரபித்து இருக்கிறார்கள். ராணுவ துணையோடு இதை அடக்க வேண்டும். அவர்கள் சில கோரிக்கைகள் இந்திய சட்ட திட்டங்களுக்கு எதிராக இருக்கிறது.


அம்புஜம்
பிப் 17, 2024 08:42

உ.பி விவசாயிகளுக்கு என்ப ஆச்சு? மோடியும், யோகியும் டௌள்.இஞ்சின் சர்க்கார் ஆட்சி நடத்தி, ஜி.எஸ்.டி நிதியை வாரி வாரி குடுக்கிறாங்களே?


சந்திரசேகர்
பிப் 17, 2024 07:24

அவர்கள் உண்மையாகவே தன் கோரிக்கைக்கு போராட வந்தால் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். ஆனால் இந்த போராட்டம் எதிர் கட்சிகளால் தூண்டப்பட்டு தேர்தல் சமயத்தில் நடக்கும் போராட்டம். இதில் இந்த விவசாய போராளிகள் ஏதாவது ஆதாயம் தமக்கும் கிடைக்கும் என்ற நப்பாசையில் போராடுகிறார்கள்.


தாமரை மலர்கிறது
பிப் 17, 2024 00:15

சுயநல கோரிக்கையை மட்டுமே மனதில் வைத்து வெறித்தனமாக போராடுவது, பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். விவசாயிகள் என்ற போர்வையில் காலிஸ்தான் தீவிரவாதிகள் போராட்டம் செய்கிறோம் என்ற பெயரில், மினிஸ்டர் மகன் சென்ற ஜீப்பிற்கு அடியில் புகுந்து, தற்கொலை போராட்டம் நடத்தினார்கள். எந்த எல்லைக்கும் போக தயாராக உள்ளது தவறான போக்கு.


தாமரை மலர்கிறது
பிப் 17, 2024 00:09

பொதுமக்களின் அவதி பற்றி கொஞ்சமும் அக்கறையின்றி விவசாயிகள் போராட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது. இந்த போராட்டம் தொடர்ந்தால், நாடு கம்ம்யூனிஸ்ட் நாடாகி மக்கள் பட்டினியால் சாவார்கள். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு போராட்டம் பண்ணுவது அல்வா சாப்பிடுவது போன்று வருடத்திற்கு ஒருமுறை போராட்டம் பண்ணுவார்கள். கோரிக்கைகளை நிறைவேற்றினால், உணவுப்பொருள்கள் விலை வானளவு உயர்ந்து, ஏழை மக்கள் பட்டினியால் சாகும் நிலை ஏற்படும். மயிலே மயிலே என்றால் இறகு போடாது. லத்தியை எடுத்து வெளுத்து விடுவது நல்லது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை