உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாயிகள் மறியல் போராட்டம் ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பு

விவசாயிகள் மறியல் போராட்டம் ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பு

சண்டிகர்: மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக, பஞ்சாபில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் நேற்று மூன்று மணி நேர ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள், பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மூன்று முறை டில்லிக்கு செல்ல முயன்ற அவர்களை ஹரியானா பாதுகாப்பு படையினர் எல்லையிலேயே தடுத்து நிறுத்தினர்.இதற்கிடையே, விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என வலியுறுத்தி, பஞ்சாப் விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மசுதார் மோர்ச்சா ஆகிய அமைப்புகள், மத்திய அரசின் கவனம் ஈர்ப்பதற்காக ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி, நேற்று மதியம் 12:00 மணிக்கு துவங்கி 3:00 மணி வரை, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் ரயில்களை மறித்து போராட்டம் நடத்தினர். இதனால், பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமடைந்தன. பயணியர் பாதிக்கப்பட்டனர்.

நீதிமன்ற கதவுகள் திறந்தே இருக்கும்!

பஞ்சாப் விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவாலின் உண்ணாவிரதம் குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பஞ்சாப் அரசின் வழக்கறிஞர் குர்மிந்தர் சிங், “விவசாயிகளை சமாதானப்படுத்த மாநில அரசு தினமும் முயற்சித்து வருகிறது. ஆனால், போராட்டம் நடத்தும் விவசாயிகள் பேச மறுக்கின்றனர். விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை நேரடியாக நீதிமன்றத்திடம் தெரிவிக்க அனுமதிக்கலாம்,” என்றார்.இதை கேட்ட நீதிபதிகள், 'விவசாயிகள் நேரடியாகவோ அல்லது அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி வாயிலாகவே எந்த ஆலோசனைக்கும் அல்லது கோரிக்கைக்கும் உச்ச நீதிமன்றத்தை நாடலாம்; நீதிமன்ற கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்' என்றனர். மேலும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜக்ஜித் சிங்கிற்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ராமகிருஷ்ணன்
டிச 19, 2024 21:15

வெவரம் இல்லாத சிங்குக. கட்டுமரம் அண்ணன், எப்படி ரயில் வரவே வராத தண்டவாளத்தில் படுத்தது போல படுக்கனும்பா, மிக பெரிய போராட்டம் போல பில்டப் கொடுத்து விடனும்.


Karthik
டிச 19, 2024 10:19

காங் கிராஸின் கை கூலிகள்....


Ram
டிச 19, 2024 09:41

விவசாயிகள் போராட்டத்துக்கு ரயில் மறியலில் ஈடுபட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடாது... விவசாயிகள் போல சாதாரண மக்களுக்கும் ரயிலில் சென்று ஆயிரம் வேலைகளை முடிக்கவேண்டியிருக்கும். அவர்கள் நீதிமன்றத்தை நாடலாம், அதைவிடுத்து இந்தமாதிரி செய்தால் அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்


அப்பாவி
டிச 19, 2024 09:05

இங்கே விவசாயிகள் கஷ்டப்பட்டால் அங்கே வந்தே பாரத் ல போக முடியலியேன்னு புலம்பும் ஒரு கூட்டம்.


Just imagine
டிச 19, 2024 06:40

எந்த ஒரு காரணத்திற்காகவும் ரயில் மறியல் செய்யும் எந்த ஒரு மனிதரும் .... அவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் ரயில் பயணம் செய்ய ஆயுட்கால தடை விதிக்க வேண்டும்.


Kasimani Baskaran
டிச 19, 2024 05:53

விவசாயிகள் போல இல்லை - செழிப்பாக இருப்பதை பார்த்தால் காங்கிரஸ்காரர்கள் போல இருக்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை