உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜஸ்தானில் விவசாயிகள் மீது தடியடி : 4வது நாளாக போராட்டம்

ராஜஸ்தானில் விவசாயிகள் மீது தடியடி : 4வது நாளாக போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கோரிக்கைகளை வலியுறுத்தி ஹரியானா, பஞ்சாப் எல்லையில் விவசாயிகளின் போராட்டம் 4வது நாளாக இன்றும் தொடர்கிறது. இதனிடையே, விவசாய சங்கத்தினர் நாடு தழுவிய பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. ராஜஸ்தானில் ஹனுமன்கார் என்ற இடத்தில் போலீசார் வைத்திருந்த தடுப்புகளை விவசாயிகள் அகற்றினர். இதனையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தினர். விவசாய உற்பத்தி பொருட்களுக்கு, எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, பஞ்சாபைச் சேர்ந்த பல விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. 'டில்லி சலோ' எனப்படும் டில்லியை நோக்கி பேரணி என்ற பெயரில், பல விவசாய சங்கத்தினர் தங்கள் பயணத்தை பிப்.,13ல் துவக்கினர்.போராட்டத்தை கைவிடுவதற்கு மத்திய அரசு நடத்திய பேச்சில் முடிவு ஏற்படவில்லை. சண்டிகர், டில்லியை நோக்கி பேரணி நடத்த முயன்றள்ள விவசாய சங்கத்தினர், பஞ்சாப் -- ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை கலைந்து போகச் செய்ய, கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்டன. இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருடன், விவசாயிகள் மோதலில் ஈடுபட்டனர். இதில் சிலர் காயமடைந்தனர்.போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர விவசாய சங்கத்துடன் நேற்று விவசாய சங்கத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை அன்றும் பேச்சுவார்த்தையை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.தங்களது கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய ‛பாரத் பந்த்'திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை விவசாய பணிகளை நிறுத்திவிட்டு சாலை மறியலில் ஈடுபடும்படி சங்கங்கள் அறிவுறுத்தின. இதையடுத்து, உ.பி.,யின் கவுதம புத் நகர், நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கூடுவதற்கு மாவட்ட நிர்வாகங்கள் தடை விதிக்கப்பட்டன.ஹரியானாவில் சாலைப்பணியாளர்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்டனர். சுங்கச்சாவடி ஊழியர்களும் தங்களது பணியை புறக்கணித்தனர். இதனால், வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக சுங்கச்சாவடிகளை கடந்து சென்றன.குறைந்த பட்ச ஆதார விலை, பென்சன் , குறைந்தபட்ச சம்பளம் உள்ளிட்ட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி ஜந்தர் மந்தரில் 9 சங்கங்களை சேர்ந்த மூத்த தலைவர்கள் போராட்டம் நடத்தினர்.டில்லி, பஞ்சாப், ஹரியானா எல்லையில் துணை ராணுவப்படையினர் தங்கள் மீது அத்துமீறுவதாக குற்றம்சாட்டிய விவசாய சங்கத்தினர், நாங்கள் ஒன்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் கிடையாது என தெரிவித்துள்ளன. பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Bala
பிப் 17, 2024 02:48

தேர்தல் நெருங்குவதால் அந்நிய சக்திகளால் தூண்டிவிடப்படும் இதுபோன்ற போராட்டங்களை நாம் அனைவரும் ஒன்றுபட்டு இதை முறியடிக்கவேண்டும். விவசாயிகள் தூண்டிவிடப்பட்டபின், சற்று நேரம் முன் மணிப்பூரிலும் கலவரத்தை தூண்டிவிட்டுள்ளனர். மேற்கு வங்கத்திலும் கலவரத்தை தூண்டிவிட்டுள்ளனர். பாரத பிரதமர் மோடியை வீழ்த்துவதற்கு எல்லா குள்ளநரித்தனங்களையும் பயன்படுத்துகின்றனர். ஆனால் இவற்றுக்கெல்லாம் துணைபோகும் காங்கிரஸ் திமுக போன்ற எதிர்க்கட்சிகள் வரும் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்படுவது உறுதி


S. Gopalakrishnan
பிப் 16, 2024 22:31

டில்லியில் போராட்டத்தில் ஈடுபடும் ஏழை விவசாயிகளின் இந்த மெர்சிடெஸ் ஜி வேகன் கார் விலை வெறும் 2.55 கோடிதான், பாவம்..????????????விவசாயிகள் போர்வையில் நகர்புற நக்ஸல்கள் மற்றும் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள்..????சென்ற முறை காலை மதியம் சப்பாத்தி, மாலையில் மிட்டாய் வகைகள், பீட்ஸா ஆகியவை வழங்கப்பட்டன. ஏர் கண்டிஷனர், துணி துவைக்கும் இயந்திரம் சகிதம் போராடியது நினைவிருக்கலாம்.இம்முறை இரவு நேரத்தில் ரெக்கார்டு டான்ஸ் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக தில்லி வட்டாரத்தில் கிசு கிசுக்கப் படுகிறது.


Priyan Vadanad
பிப் 16, 2024 17:24

இது பிரிவினைவாதிகளோ தீவிரவாதிகளோ அல்லது. பாஜகவை இம்முறையும் வெற்றி பெற செய்ய வந்த கிருஷ்ணர்கள்.


kulandai kannan
பிப் 16, 2024 16:11

பசியைத் தீர்க்கும் மாத்திரை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டால் இவர்களது ஆட்டம் தன்னால் அடங்கும், BSNL ஊழியர்களைப்போல்.


தத்வமசி
பிப் 16, 2024 15:34

உறங்குபவனை எழுப்பி விடலாம், பசிப்பவனுக்கு உணவிடலாம், உழைப்பவனுக்கு உதவிடலாம். ஆனால் நடிப்பவனுக்கு எதுவும் செய்யக் கூடாது. தண்டம் மட்டுமே தேவை. இந்த காலிஸ்தானி / காங்கிரஸ் வெட்டிப் பயலுகள் விவசாயிகள் கிடையாது. இவர்கள் இடைத்தரகர்கள். மத்திய அரசு விவசாய சட்டத்தினை கொண்டு வந்த போதும் இந்த கூட்டம் பல நாட்கள் போராட்டம் செய்தன. இப்போது அதற்காக இப்போது வேறு விதத்தில் போராட்டம் நடத்துகின்றன. எங்கிருந்தோ வரும் காசுக்கு அடிமையாகி, தானும் வாழாமல் மற்றவரையும் வாழ விடாது கும்பலை எதுவும் செய்யலாம்.


ராஜா
பிப் 16, 2024 12:53

இந்த காலிஸ்தான் தீவிரவாதிகளை இராணுவத்தை கொண்டு விரட்டி விட வேண்டும்.


செந்தமிழ் கார்த்திக்
பிப் 16, 2024 12:53

சோறு போடும் விவசாயிகளை தெருவில் இறங்கி போராட செய்வது தான் ராம ராஜ்ஜியம் போல. ? கடவுள் ராமரே மன்னிக்க மாட்டார்.


மகாலிங்கம்,கோவை
பிப் 16, 2024 14:26

சோறு போடும் விவசாயிகளை குண்டாஸில் போடுவதுதான் திராவிட மாடலா...சமூக நீதியா..???


naranam
பிப் 16, 2024 16:37

தடியடியோடு நிறுத்திக் கொள்ள கூடாது. பேருந்தின் மேல் படுத்த படியே இவர்களைச் சுட்டுத்தள்ளவும் வேண்டும்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி