உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏரியில் மூழ்கி தந்தை, மகன் பலி

ஏரியில் மூழ்கி தந்தை, மகன் பலி

ராம்நகர் : குருபரஹள்ளி கிராமத்தில், ஆடுகளை குளிப்பாட்ட சென்ற தந்தையும், மகனும் ஏரி நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.ராம்நகர், கனகபுராவின், குருபரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜு, 50. இவரது மகன் பிரசன்னா, 23. தந்தையும், மகனும் நேற்று காலை ஆடுகளை குளிப்பாட்ட கிராமத்தின் ஏரிக்குச் சென்றனர்.நீரில் இறங்கி ஆடுகளை குளிப்பாடியபோது,ராஜு கால் தவறி நீரில் விழுந்தார். தந்தையை காப்பாற்றச் சென்ற மகனும் நீரில் குதித்தார். இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.சாத்தனுர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி