உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுவன் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் தந்தைக்கு ஜாமின்

சிறுவன் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் தந்தைக்கு ஜாமின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புனே: மஹாராஷ்டிராவில் 17 வயது சிறுவன் சொகுசு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் சிறுவனின் தந்தைக்கு கோர்ட் ஜாமின் வழங்கியது.மஹாராஷடிரா மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த தொழிலதிபர் விஷால் அகர்வால், புதிய போர்ஷோ ரக சொகுசு காரில் கடந்த 19-ம் தேதியன்று அதிகாலையில் புனே அருகே கல்யாணி நகர் பகுதியில் 200 கிமீ அசுர வேகத்தில் காரை ஓட்டிச்சென்ற போது எதிரே பைக்கில் வந்த அனிஸ் அவதியா, இவரது மனைவி அஷ்வினி கோஷ்தா என்ற தம்பதியினர் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், காரை ஓட்டியது 17 வயது சிறுவன் என தெரியவந்தது. சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்தனர். விசாரணையில் காரை ஓட்டி வந்த சிறுவன் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. சிறுவனுக்கு கார் ஒட்ட அனுமதித்த குற்றத்திற்காக அவரது தந்தை விஷால் அகர்வாலை போலீசார் கைது செய்தனர்.புனே செஷன்ஸ் கோர்டில் நடைபெற்று வந்த வழக்கில் ஜாமின் கோரி விஷால் அகர்வால் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி விஷால் அகர்வாலுக்கு ஜாமின் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Priyan Vadanad
ஜூன் 21, 2024 20:36

இவரை கைது செய்திருக்கக்கூடாது. மாறாக அவர் பையனுக்கு காரோட்டவே தெரியாது என்று சாட்சியங்களோடு நிரூபிக்க உதவி செய்திருக்கவேண்டும்.


Nandakumar Naidu.
ஜூன் 21, 2024 20:35

சபாஷ், இனி சாட்சியங்களையும், தடயங்களையும் அழிப்பார் போலீசாருடன் மற்றும் அரசியல் வாதிகளின் உதவியுடன். எல்லாம் இந்தியாவில் தான் நடக்கும்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி