மகளை சீரழித்த தந்தைக்கு 72 ஆண்டுகள் சிறை
மூணாறு,:பத்து வயது மகளை தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்த தந்தைக்கு 72 ஆண்டுகள் சிறை, ரூ.1.8 லட்சம் அபராதம் விதித்து பைனாவ் அதிவிரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது.இடுக்கி மாவட்டம் வாகமண் பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய தந்தை தனது 10 வயது மகளை தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்தார். 2020ல் இது வெளியே தெரியவந்தது. வாகமண் போலீசார் போக்சோவில் தந்தையை கைது செய்தனர்.இந்த வழக்கு பைனாவ் அதிவிரைவு நீதிமன்றத்தில் நடந்தது. சிறுமியின் தந்தைக்கு 72 ஆண்டுகள் சிறை, ரூ.1.8 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி லைஜூமோள்ஷெரீப் உத்தரவிட்டார்.