உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தந்தை கொலை மருத்துவ மாணவர் வெறிச்செயல்

தந்தை கொலை மருத்துவ மாணவர் வெறிச்செயல்

திருவனந்தபுரம்: கேரளாவில், மருத்துவ மாணவர் தன் தந்தையை வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தின் வெள்ளரடா பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ், 70. இவரது மகன் பிரதீப், 28. அண்டை நாடான சீனாவில் எம்.பி.பி.எஸ்., படித்து வந்த இவர், கொரோனா காலத்தில் கேரளா திரும்பினார். இதுவரை, அவர் எம்.பி.பி.எஸ்., படிப்பை முடிக்கவில்லை.இந்நிலையில், அவர்களது வீட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவில் பயங்கர அலறல் சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது, ஜோஸ் ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதைப் பார்த்த ஜோசின் மனைவி சுஷாமா அலறி மயங்கி விழுந்தார்.அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் ஜோசின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், தந்தையை மகனே வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.கொலை செய்துவிட்டு தப்பிய பிரதீப் போலீசில் சரண் அடைந்தார். முதற்கட்ட விசாரணையில், தன்னை சுதந்திரமாக வாழ தந்தை அனுமதிக்காததால் வெட்டிக்கொலை செய்ததாக பிரதீப் வாக்குமூலம் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ