உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நோயாளி போல் வந்து பீஹாரில் பெண் டாக்டர் சுட்டுக்கொலை

நோயாளி போல் வந்து பீஹாரில் பெண் டாக்டர் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நோயாளிகள் போல் வந்த ஆறு பேர் கும்பல், அங்கிருந்த பெண் டாக்டரை பட்டப்பகலில் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பீஹாரில், பாட்னாவின் ஆகம் குவான் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. இங்கு, நோயாளிகள் வேஷத்தில், ஆறு பேர் கும்பல் நேற்று வந்துள்ளது. அந்த மருத்துவமனை இயக்குநரின் மனைவியான, பெண் டாக்டர் சுரபி ராஜ் அறைக்கு அவர்கள் சென்றனர். அந்தப் பெண் டாக்டர் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு, அந்தக் கும்பல் பைக்கில் தப்பிச் சென்றது. மருத்துவமனை ஊழியர்கள், அந்த பெண் டாக்டரை அவசர கிசிச்சை பிரிவுக்கு உடனடியாக அழைத்துச் சென்றனர். அங்கிருந்து, பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார்.அந்த கும்பல் ஆறு தோட்டாக்களை சுட்டுள்ளது. அதில், நான்கு தோட்டாக்கள் பாய்ந்ததில், பெண் டாக்டர் பலியாகியுள்ளார். துப்பாக்கியால் சுட்டவர்கள் யார் என்பதும், எதற்காக அவர்கள் சுட்டனர் என்பதும் தெரியவில்லை. இது தொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை