உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கலெக்டர் முன்னிலையில் சரணடைந்த பெண் நக்சல்

கலெக்டர் முன்னிலையில் சரணடைந்த பெண் நக்சல்

உடுப்பி; கடந்த 2006ம் ஆண்டு முதல் தேடப்படும் நக்சல் தொம்பட்டு லட்சுமி, உடுப்பி கலெக்டர் முன்னிலையில் சரண் அடைந்தார்.நச்சல் செயல்பாட்டில் ஈடுபட்டவர்கள், தாமாக முன் வந்து சரண் அடைந்தால், மறு வாழ்வு ஏற்படுத்தி தருவதாக, முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று கொண்டு, நக்சல்கள் சரண் அடைகின்றனர். ரவீந்திரா உட்பட பலர் ஆயுதங்களுடன் சரண் அடைந்தனர்.உடுப்பி, குந்தாபுராவின், தொம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி. நக்சல் கும்பலில் சேர்ந்து, 2006 முதல் தலைமறைவாக இருந்தார். இவரது கணவர் சஞ்சீவும் முன்னாள் நக்சல்தான். தம்பதி ஆந்திராவில் வசித்தனர். சஞ்சீவ் மீது கர்நாடகா, ஆந்திராவில் எந்த வழக்குகளும் இல்லை. ஆனால் லட்சுமி மீது, கர்நாடகாவில் மூன்று வழக்குகள் உள்ளன. இதில் இருந்து விடுபட விரும்பிய லட்சுமி, உடுப்பி மாவட்ட கலெக்டர் வித்யாகுமாரி முன்னிலையில், நேற்று காலை சரண் அடைந்தார்.லட்சுமி கூறுகையில், ''முதல்வர் சித்தராமையா அளித்த வாய்ப்பை ஏற்று, சரண் அடைந்தேன். என் ஊரில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. பள்ளி, குடிநீர், மருத்துவமனை வேண்டும். நான் யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் சரண் அடைந்தேன்,'' என்றார்.அவரது கணவர் சஞ்சீவ் அளித்த பேட்டி:லட்சுமி மீது மூன்று வழக்குகள் உள்ளன. நக்சல்கள் சரண் அடையும்படி, முதல்வர் அழைப்பு விடுத்தார். வழக்குகள் முடியும் என்பதால், லட்சுமி சரண் அடைந்தார். நான் 2009ல் ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்த போது, நக்சல் இயக்கத்தை விட்டு விலகினேன். நான் அடிப்படையில், பாவகடாவை சேர்ந்தவன். வரும் நாட்களில் கர்நாடகாவில் வசிப்பேன். 2008ல் லட்சுமியை திருமணம் செய்து கொண்டேன். நக்சலாக இருப்பதால், எந்த பயனும் இல்லை என்பதால், அதில் இருந்து வெளியே வந்தேன். அம்பேத்கரின் அரசியல் சாசனப்படி போராட வேண்டும். ஆயுதங்களை வைத்து கொண்டு, காட்டில் போராட வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி