உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெராரி சொகுசு காருக்கு ரூ.1.42 கோடி அபராதம்

பெராரி சொகுசு காருக்கு ரூ.1.42 கோடி அபராதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடகாவில், வரி செலுத்தாமல், 'பெராரி' சொகுசு காரை ஓட்டி வந்த நபர், 1.42 கோடி ரூபாய் அபராதம் செலுத்தி காரை மீட்டுள்ளார். கர்நாடகாவின் பெங்களூரு ஜெயநகர், லால்பாக் பகுதியில், மஹாராஷ்டிர பதிவெண் உடன், 'பெராரி எஸ்.எப்., 90 ஸ்ட்ராடேல்' சொகுசு கார் அடிக்கடி சென்று வருவதை போக்குவரத்து போலீசார் நோட்டம் விட்டனர். இந்த காரின் விலை, 7.50 கோடி ரூபாய். அதை ஓட்டி வந்தவரை போலீசார் மடக்கி விசாரித்தனர். கர்நாடகாவில், வேற்று மாநில பதிவு உடைய காரை ஓராண்டு வரை மட்டுமே வரியின்றி பயன்படுத்த அனுமதி உள்ளது. அதன் பின், கர்நாடக போக்குவரத்து துறைக்கு சாலை வரி செலுத்த வேண்டும். 'பெராரி' கார் உரிமையாளர் 18 மாதங்களுக்கு மேலாக சாலை வரி கட்டாதது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு வரியுடன் 1.42 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது; கட்டத் தவறினால் கார் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து உரிமையாளர் காருக்கான சாலை வரி மற்றும் அபராத தொகையான 1.42 கோடி ரூபாயை செலுத்தி விட்டு காரை மீட்டார். மஹாராஷ்டிராவில் வாகனங்களுக்கான வரி, கர்நாடகாவை காட்டிலும் குறைவு என்பதால் உரிமையாளர் அதனை அதை வாங்கிவிட்டு கர்நாடகாவில் ஓட்டி வந்ததாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Palanisamy Sekar
ஜூலை 05, 2025 04:38

இவராவது வரியை செலுத்திவிட்டு காரை மீட்டார். ஆனால் நம்ம ஊரு விஜய் வெளிநாட்டிலிருந்து இறக்குமதில் செய்த காருக்கு சுங்கவரி செலுத்தாமல் கோர்ட்டில் முறையிட்டு வரிவிலக்கு கேட்டார். கோர்ட் வைத்த செம குட்டில் புலம்பிக்கொண்டே வரி செலுத்தினார். அன்றுமுதல் பாஜக அரசுமீது கடும் கோபத்தில் இருந்தார். இப்போது பாஜகவை வெறுப்பேத்தவே வடக்குப்பட்டி ராமசாமியை தூக்கிவைத்து அரசியல் செய்கின்றார். இவருக்கெலாம் முதல்வர் பதவி வேறு வேணுமாமே . நாடு விளங்குமா என்ன?


Senthoora
ஜூலை 05, 2025 06:03

முடவன் கல்யாணத்துக்கு ஆசைப்படுவது தப்பு இல்லை. ஆனால் கொம்பு தேனுக்கு ஆசைப்படலாமோ? முதலில் அரசியல் படிங்க, அப்புறம் MLA, MP ஆகி முதலமைச்சராகலாம், என்னவோ ஒரு பாடல், காபி ஹோட்டல் வைத்திருந்தவன் உணவுமந்திரியும், காலேஜிக்கு போகாமலே கல்வி மந்திரி ஆனாங்க ஒரு ஊசிலமணி பட்டு இப்போ ஞாபகம் வருது.


ramesh
ஜூலை 05, 2025 10:12

விஜய் எங்கள் பிஜேபி கூட்டணிக்கு வா வா என்று அழைத்தவர்கள் ,நேற்று அவர் பிஜேபி மற்றும் dmk உடன் கூட்டனில் இல்லை என்றவுடன் வெறுத்து போய் சீ சீ இந்த பழம் புளிக்கும் என்பது போல உள்ளது பழனிசாமி அவர்களே


புதிய வீடியோ