உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம்: இந்தியாவுக்கு பிரிட்டன் ஆதரவு

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம்: இந்தியாவுக்கு பிரிட்டன் ஆதரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்ததுடன், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி ஆதரவு தெரிவித்தார்.பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது வர்த்தகம், ஆழமான நட்பு, உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவற்றை குறிப்பிட்டு பிரதமர் மோடி திருப்தி தெரிவித்தார். மேலும், பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மருக்கு மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, அவரை விரைவில் இந்தியாவுக்கு வர வேண்டும் என மீண்டும் அழைப்பு விடுத்தார்.இதனைத் தொடர்ந்து டேவிட் லாம்மி கூறியதாவது: வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு, தொழில்நுட்பம், புதுமை மற்றும் தூய்மையான எரிசக்தி உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதில் பிரிட்டன் தனது வலுவான ஆதரவை அளிக்கிறது.மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறோம்.தொழில்நுட்ப பாதுகாப்பு முன்முயற்சியின் கீழ் தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் நம்பகமான மற்றும் பாதுகாப்பான கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்புகளை வடிவமைப்பதற்கான அதன் திறன் திருப்திகரமாக உள்ளது.இவ்வாறு டேமிட் லாம்மி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sasikumaren
ஜூன் 08, 2025 07:27

பக்கி தீவிரவாதிகள் இந்தியாவுக்கு மட்டுமே பிரச்சினை இல்லை இது உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் தலையாய பிரச்சினை மனிதர்கள் வசிக்கும் எல்லா கண்டங்களிலும் இந்த பக்கியில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் நிறைய நாடுகளில் குடி புகுந்து கொண்டு பிறகு தீவிரவாதத்தை வளர்த்து விடுகிறான்கள். இந்தியாவை போலவே இஸ்ரேல் நாடும் பல வருடங்களாக யுத்தம் செய்து கொலைகார பாரம்பரிய தீவிரவாதிகளை எதிர்த்து யுத்தம் செய்து வருகிறது இப்போது தெற்கு அமெரிக்காவுக்கு இந்த தீவிரவாதிகள் குடிபெயர்ந்து வருகிறான்கள் அந்த கண்டத்திலும் தீவிரவாதம் தலை தூக்கும் கனடா ஏற்கெனவே காலிஸ்தான் தீவிரவாததிகளால் ஆக்கிரமிப்பு செய்து வருகிறது அங்கேயும் வன்முறை கலவரம் யுத்தம் முளைக்க போகிறது காரணம் பக்கிஸ் நாட்டில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் தான் காரணம் இருப்பான்கள்.


Priyan Vadanad
ஜூன் 08, 2025 00:16

பாகிஸ்தானை கண்டிக்கிறோம் என்று சொல்லியிருந்தால் இன்னும் ஸ்பெசிபிக்காக இருந்திருக்கும். அது ஏன் போகிற நாட்டிலெல்லாம் பொத்தாம் பொதுவாக தீவிரவாதத்தை எதிர்க்கிறோம் என்று மட்டும் சொல்லுகிறார்கள். தீவிரவாத ஒழிப்பு என்பது ஒரு பொதுவான கான்செப்ட். பாகிஸ்தானை கீழே போட்டு சவட்டிவிட்டோம், இன்னும் சவட்டுவோம் என்று நாம் பெருமையுடன் சொல்லிக்கொள்வதுதான் சிறப்பு, பெருமை.


RAJ
ஜூன் 07, 2025 21:58

நல்லது பிரிட்டன். முதல்ல உங்க ஊர்ல இருக்கிற பொறுக்கிங்கள சுடுங்க.. எல்லாம் சரி ஆகிடும் ..


Ramesh Sargam
ஜூன் 07, 2025 21:29

மற்றநாடுகளின் ஆதரவு கிடைக்காவிட்டாலும், இந்தியா சோர்ந்துபோய்விடாது. தன்னந்தனியாக பயங்கரவாதத்தை எதிர்த்து போரிட்டு, அவர்களை வேரோடு சாய்க்கும்.இது இப்பொழுது உள்ள மோடி ஆட்சியால் சாத்தியமாகும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை