உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்காவின் அழுத்தங்களை சமாளிக்கும் வல்லமை மோடிக்கு உண்டு; பிஜி பிரதமர் பாராட்டு

அமெரிக்காவின் அழுத்தங்களை சமாளிக்கும் வல்லமை மோடிக்கு உண்டு; பிஜி பிரதமர் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அமெரிக்காவின் அழுத்தங்களை சமாளிக்கும் வல்லமை மோடிக்கு உண்டு என்று பிஜி பிரதமர் சிதிவேனி லிகமமடா ரபுகா பாராட்டி உள்ளார்.உலக நாடுகளுக்கு வரிகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இறக்குமதியாகும் இந்திய பொருட்களுக்கும் 50 சதவீதம் வரி அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு இன்று(ஆக.27) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறி இருந்தார்.இந் நிலையில் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பிஜி பிரதமர் சிதிவேனி லிகமமடா ரபுகா, பிரதமர் மோடியை சந்தித்தார். இருதரப்பிலும் பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. பின்னர், உலக விவகார கவுன்சில் (ICWA) ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சிதிவேனி லிகமமடா ரபுகா கலந்து கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது; இப்போது அங்கு(அமெரிக்கா) நடக்கும் விஷயங்கள் அமெரிக்காவுடனான உறவை பாதிக்கிறது. சமீபத்திய கட்டண அறிவிப்புகள் பற்றி நான் அவரிடம்(பிரதமர் மோடி) பேசினேன்.யாரோ ஒருவர் உங்களால் மகிழ்ச்சியாக இல்லை. ஆனால், அப்படியான அசௌகரியங்களை தாங்கும் வல்லமை கொண்டவர். இவ்வாறு ரபுகா பேசினார்.முன்னதாக, டில்லியில் ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக அவர் சந்தித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

T.sthivinayagam
ஆக 27, 2025 12:16

சீனாவை பற்றி பேசிவர்களை தேசவிரோதி என்று கூறியவர்கள் இப்போது ஆரியபவன் ஊச வடை போல் ஆகிவிட்டார்கள்


vivek
ஆக 27, 2025 18:45

இப்போது பீகார் பீடா சொந்தமாகி விட்டார் சிவநாயகம்


google
ஆக 27, 2025 09:08

Yes


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 27, 2025 09:01

இப்படி உசுப்பேத்தி விட்டே


Tamilan
ஆக 27, 2025 08:47

இனியும் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் தாலிபான்களிடம் சரணடையவில்லை


N Sasikumar Yadhav
ஆக 27, 2025 10:08

பாரதம் இல்லையென்றால் இந்நேரம் உங்க பாசமுள்ள....


vivek
ஆக 27, 2025 11:11

டாஸ்மாக்கில் சரணடைந்து விட்டான்


சமீபத்திய செய்தி