தக்காளி மண்டியில் தீ விபத்து
கோலார்: கோலார் ஏ.பி.எம்.சி., எனும் வேளாண் விளை பொருள் சந்தைக்குழுவில் இருந்து, பிற நகரங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகின்றன. இங்கு சோமண்ணா என்பவருக்கு சொந்தமான தக்காளி மண்டி உள்ளது. நேற்று முன்தினம் திடீரென தக்காளி பெட்டிகளில் தீப்பிடித்தது. சில நிமிடங்களில் மளமளவென தீ பரவியது. அப்பகுதி முழுதும் புகை மயமானது.உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த அவர்கள், இரண்டு மணி நேரம் தீயணைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில், 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தக்காளி பெட்டிகள் எரிந்து நாசமானதாக, அங்குள்ளோர்தெரிவித்தனர்.