உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாராஷ்டிராவில் டயர் ஆலையில் தீ விபத்து: குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் படுகாயம்

மஹாராஷ்டிராவில் டயர் ஆலையில் தீ விபத்து: குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் படுகாயம்

மும்பை: மஹாரஷ்டிராவின் பால்கரில் உள்ள டயர் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வடாவலி கிராமத்தில் டயர் ஆலை இயங்கி வருகிறது. இங்கு இன்று மாலையில் பாய்லர் வெடிப்பால் தீ விபத்து ஏற்பட்டது.சம்பவம் குறித்து பால்கரின் பேரிடர் மேலாண்மைப் பிரிவு தலைவர் விவேகானந்த் கடம் கூறியதாவது:இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த 5 பேர்களில், இரண்டு குழந்தைகளும் அடங்குவர்.காயமடைந்த பெரியவர்கள் வாடா தாலுகாவில் உள்ள குடுஸ் தொழில்துறை பகுதியில் அமைந்துள்ள நிறுவனத்தின் தொழிலாளர்களா என்பது உடனடியாகத் தெரியவில்லை. இந்தச் சம்பவம் மாலை 6 மணிக்குப் பிறகு தொழிற்சாலையில் உள்ள இரண்டு பாய்லர்களில் எண்ணெய் பதப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது நிகழ்ந்தது. திடீரென ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, பாய்லர்களில் ஒன்றின் குழாய் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.காயமடைந்தவர்கள் துபான் கல்சிம் தாமோர்,30, ரோஷ்னி பிரவீன் பர்மர்,26, முலா பிரேமா வாசர்,27, மற்றும் இரண்டு குழந்தைகள் - காஜல் பர்மர்,3, மற்றும் 18 மாத குழந்தை ஆகாஷ் பிரேம் மசார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபுவாவைச் சேர்ந்தவர்கள்.காயமடைந்தவர்களில் சிலர் தொழிற்சாலையை ஒட்டிய வீடுகளில் வசிப்பவர்கள். காயமடைந்தவர்கள் உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் மேம்பட்ட மருத்துவ சிகிச்சைக்காக தானேவுக்கு மாற்றப்பட்டனர்.உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இவ்வாறு விவேகானந்த் கடம் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை