உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கான்பூரில் 5 அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து; ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி

கான்பூரில் 5 அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து; ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கான்பூர்: உத்தரபிரதேசத்தில் 5 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். கான்பூரில் உள்ள சமான்காஞ்ச் பகுதியில் அமைந்துள்ள 5 மாடி கட்டடத்தின், முதல் இரு தளங்களில் ஷூ தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஷூ தயாரிப்பு நிறுவனத்தில் நேற்றிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மளமளவென எரிந்த தீ, மற்ற தளங்களுக்கும் பரவியதால், அப்பகுதியில் கரும்புகை எழுந்தது. உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.இந்த நிலையில், 4வது மாடிக்கும் தீ பரவிய நிலையில், முகமது டேனிஷ், 45, நஷ்னீன் சாபா,42, ஆகியோர் உடல்கருகி உயிரிழந்தனர். இவர்களின் 3 மகள்களும் தீ விபத்தில் சிக்கிக் கொண்டனர். இறுதியில் அவர்களும் உயிரிழந்தனர். 4வது மாடிக்கும் பரவிய தீயால், வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் வெடித்து சிதறியது. இதன் காரணமாகவே, தீவிபத்து மேலும் பரவியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mohan
மே 05, 2025 16:45

துரோகமே வடிவானவர்களும், சுயநலவாதிகளாகிய ஹிந்துக்களுக்கு மடிந்து கொண்டிருக்கிறார்கள் எல்லா இடத்லயும் பாருங்க நம்ம ஆளுக தான் இருப்பாங்க ...ஒரு சாலை விபத்து ஆகட்டும் , ஏதுவாகட்டும் நாமளே போயி ஆப்பை சொருகிக்கறது ..ஆக மொத்தலுல நமக்கு நேரம் சரி இல்லை


ديفيد رافائيل
மே 05, 2025 11:48

நிறைய apartment காரனுங்க house க்காக கட்டி விட்டு சீக்கிரம் பணம் சம்பாதிக்க commercial rent விடுவறானுங்க அதனால தான் இந்த விபத்து. இங்கு Coimbatore ல கூட இப்படி தான்.


புதிய வீடியோ