உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி ஹாத் சந்தையில் தீ விபத்து

டில்லி ஹாத் சந்தையில் தீ விபத்து

டில்லி ஹாத்:தெற்கு டில்லியில் உள்ள ஐ.என்.ஏ., பகுதியின் பிரபலமான சந்தையான டில்லி ஹாத்தில் நேற்று முன்தினம் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 30க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகின. 13 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர்.மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் இந்த விபத்து குறித்து போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.சுற்றுப்புறப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.போலீஸ் விசாரணை காரணமாக நேற்று சந்தை மூடப்பட்டிருந்தது. வியாபாரிகளுக்கு இழப்பீடு வழங்க அரசு முன்வந்திருப்பதாக மாநில அமைச்சர் கபில் மிஸ்ரா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை