பஞ்சாபில் ஓடும் ரயிலில் தீ: பயணிகள் அச்சம்
அமிர்தசரஸ்:பஞ்சாபின் அமிர்தசரஸில் இருந்து மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரிக்கு கர்மபூமி எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது. சிறிது நேரத்தில், இன்ஜினில் இருந்து உள்ள ஐந்தாவது பெட்டியில் திடீரென தீப்பற்றியது. இது அடுத்தடுத்து நான்கு பெட்டிகளுக்கும் பரவியது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு அவசர கால பேரிடர் மீட்புப்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ggainn5f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அச்சமடைந்த பயணிகள் அனைவரும் உடனடியாக ரயிலில் இருந்து வெளியேறினர். தீவிபத்தால் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் இல்லை.