உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தகர கொட்டகையில் தீ

தகர கொட்டகையில் தீ

புதுடில்லி: இரண்டு அடுக்கு வீட்டின் மாடியில் தகரக் கொட்டகையில் பற்றிய தீ, உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. வடக்கு டில்லி பாரா ஹிந்து ராவ் பகுதியில் உள்ள இரண்டு அடுக்கு வீட்டின் மாடியில், ‘ஸ்பிரே பெயின்டிங்’ செய்ய பயன்படுத்தும் உலோக காற்று தொட்டி அமைக்கப்பட்டு இருந்தது. அதற்கு தகரத்தில் கூரையும் அமைக்கப்பட்டு இருந்தது. இன்று (நவ.,1) காலை, தகரக்கொட்டகை திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து, நான்கு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரத்துக்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தீப்பற்றியதற்கான காரணம் குறித்து ஆய்வு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை