உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புருனே சென்ற முதல் இந்திய பிரதமர் : மோடிக்கு உற்சாக வரவேற்பு

புருனே சென்ற முதல் இந்திய பிரதமர் : மோடிக்கு உற்சாக வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : அரசு முறைப்பயணமாக புருனே சென்றடைந்தார் பிரதமர் மோடி. அவருக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இந்தியா - புருனே இடையே நட்புறவு ஏற்பட்டதன் 40ம் ஆண்டையொட்டி பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக இன்று (செப்.,03) காலை புருனே புறப்பட்டு சென்றார். அங்கு புருனே சுல்தான் ஹசனல் போல்க்கையாவை சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் நட்புறவு குறித்து விவாதிக்க உள்ளார். இதன்மூலம் புருனே நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1ok9sji3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0புருனே தருஸ்ஸலாம் விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. புருனே தலைநகர் பண்டார் செரி பெகவான் பகுதியில் அவர் தங்கவுள்ள ஹோட்டலில் இந்திய வம்சாவளியினர் நம் தேசியக்கொடியுடன் நின்று, பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். நாளை அங்கிருந்து சிங்கப்பூர் செல்ல இருக்கிறார்.

மசூதியை பார்வையிட்ட பிரதமர்

புருனே சென்ற பிரதமர் மோடி அங்குள்ள உமர் அலி சைபுதீன் மசூதியையும் பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
செப் 03, 2024 22:47

எங்கள் தலைவரும் அமேரிக்கா சென்றுள்ளார் முதலீடு ஈட்டிக்கொண்டுவர.


முருகன்
செப் 03, 2024 22:06

மணிப்பூர் சென்றால் நலம்


T.sthivinayagam
செப் 03, 2024 21:12

சீமான் சாருக்கு தெரிஞ்சா கன்னா பின்னா என்று திட்டுவார் அவருக்கு அதான் வேலை


S.VENKATESAN
செப் 03, 2024 19:29

நாம் அனைவரிடமும் மிகவும் நட்பாக உள்ளோம்


Narayanan
செப் 03, 2024 16:42

துரைமுருகனும் சிங்கப்பூர் போய் இருக்கிறார் . என்ன விஷயம் என்று அந்நாட்டில் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை