மேலும் செய்திகள்
கஞ்சா வியாபாரிகள் 4 பேர் பிடிபட்டனர்
26-Jan-2025
தேவனஹள்ளி: தாய்லாந்தில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 20 கோடி ரூபாய் மதிப்பிலான, 'ஹைட்ரோ' கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து, பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்யும் சிலர், கஞ்சா கடத்தி வருவதாக, பெங்களூரு போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள், பாங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் இறங்கிய பயணியரிடம் சோதனை நடத்தினர். ஐந்து பயணியர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை தனியாக அழைத்து சென்று சோதனை செய்த போது, உடைமைகளில் மறைத்து வைத்து ஹைட்ரோ கஞ்சா கடத்தியது தெரிந்தது. அவர்களிடம் இருந்து 20 கிலோ எடையுள்ள ஹைட்ரோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு 20 கோடி ரூபாய். ஐந்து பயணியரும் கைது செய்யப்பட்டனர். அவர்களின் பெயர், விபரங்களை வெளியிட போதை பொருள் தடுப்பு பிரிவினர் மறுத்து விட்டனர். ஆனால், ஐந்து பேரும் 30 - 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சம்பவம் என்று நடந்தது என்பதையும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கவில்லை.மலை பிரதேசங்களில் தான், சாதாரண கஞ்சா அதிகம் விளைவிக்கப்படுகிறது. ஆனால், காற்று புகாத, 'ஏசி' அறையில், கஞ்சா விதைகளை பயிரிட்டு வளர்ப்பது, 'ஹைட்ரோ' கஞ்சா என அழைக்கப்படுகிறது. இந்த வகை கஞ்சாவில், அதிக போதை கிடைக்கும் என்பதால், இதற்கு எப்போதும், 'டிமாண்ட்' அதிகமாக உள்ளது.
26-Jan-2025