உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டில் பணவீக்கம் அதிகரிக்க ஐந்து பொருட்களே காரணம் மத்திய நிதித்துறை செயலர் விரக்தி

நாட்டில் பணவீக்கம் அதிகரிக்க ஐந்து பொருட்களே காரணம் மத்திய நிதித்துறை செயலர் விரக்தி

புதுடில்லி:ஐந்தே ஐந்து பொருட்கள், நாட்டின் பணவீக்கத்தில் பிரச்னை ஏற்படுத்துவதாக, மத்திய நிதித்துறை செயலர் துஹின் காந்த பாண்டே தெரிவித்து உள்ளார்.டில்லியில், ஆங்கில வணிக ஊடகத்தின் சார்பில் நடைபெற்ற உலக தலைமைத்துவ மாநாட்டில் அவர் பேசியதாவது:அரசின் எவ்வளவோ முயற்சிக்கு இடையிலும், நாட்டின் பணவீக்கம் அதிகரித்து விடுகிறது. இதற்கு ஐந்தே ஐந்து பொருட்கள் தான் முக்கியமான காரணம். தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய ஐந்து பொருட்கள் தான், பணவீக்கப் பிரச்னையை ஏற்படுத்துகின்றன.நம் நாடு ஏறக்குறைய 165 கோடி பேரை கொண்டதாக இருக்கிறது. இதில், 112 கோடி பேர், வேலை பார்க்கும் வயதுடைய மக்கள். வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் நம் நாட்டின் மொத்த தொழிலாளர்கள் எண்ணிக்கையில், பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு, 70 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என நம்புகிறோம். நாட்டின் வளர்ச்சி நடைக்கு எதிராக வீசும் காற்றையும் சமாளித்து, நாம் வளர்ந்தாக வேண்டும்; வளர்ந்து வருகிறோம். ஆண்டுதோறும் சரியான அளவில் பருவமழையை எதிர்பார்க்கிறோம்; அதன் வாயிலாக கிராமப்புற மக்களின் பொருளாதாரம் செழிப்புற்று, பொருட்களின் தேவையை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.பொருளாதார சீர்திருத்தங்களை வெறுமனே தனியார்மயமாக்கல் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. அது உருவாக்கும் சமூக முன்னேற்றத்தையும், தொழில் செய்வதற்கு உகந்த சூழலையும் உணர வேண்டும். வர்த்தகமும், வர்த்தக கொள்கைகளும் ஒருசேர இணைந்து பணியாற்ற வேண்டும்.இவ்வாறு துஹின் காந்த பாண்டே பேசினார். பணவீக்கத்தை பதம் பார்ப்பவைதக்காளிவெங்காயம்உருளைக்கிழங்குதங்கம்வெள்ளி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Vijay Kumar Thangavel
நவ 15, 2024 19:01

சீனாவில் இருப்பதுபோல் இந்தியாவில் பெரிய பெரிய டேம் அனை வேண்டும் நீர் சேமிப்பு இருந்தால் நிலத்தடி நீர் உயரும் போதுமான அளவுக்கு நீர் கிடைத்தால், விவசாய நிலங்கள் காயாது, விவசாயிகள் விவசாயம் செய்து எல்லாவற்றையும் விளைவிப்பார்கள்


Dilli Jeevarathinam
நவ 15, 2024 18:25

பெட்ரோல் - ஐ மறந்துவிட்டாரா?


Gajageswari
நவ 15, 2024 18:24

நமது நாட்டில் உணவு பொருட்கள் வீணடிப்பது சுமார் ௧௦%.இதை தடுக்க வேண்டும். இதற்கு இலவசம் குறைக்க வேண்டும். கிராமப்புற வேலை உறுதி திட்டம் மிகவும் தேவையான இடங்களில் மட்டும் நடைமுறை படுத்த வேண்டும்


Bhaskaran
நவ 15, 2024 11:42

நிதியமைச்சர் வெங்காயம் சாப்பிடுவதில்லை எனவே அதனை லிஸ்ட்டில் இருந்து எடுத்துவிடவும்


Indian
நவ 15, 2024 08:37

நுழைய தெரியாத சுண்டெலி வழி கோணல் என்னுச்சாம்.....


Saleem
நவ 15, 2024 07:46

இல்லையே வழக்கமாக நேரு வின்சதி என்று ஜவஹாலால்நேரு மீது தானே குற்றம் சொல்வார்கள் இந்த முறை தக்காளி வெங்காயத்தின் மீது பழி போட்டுவிட்டார்கள்


Rajarajan
நவ 15, 2024 06:45

அடடே அப்படியா, சொல்லவே இல்ல நம்பிட்டோம். அப்போ நாட்டில் நஷ்டத்தில் இயங்கும் மற்றும் காலத்திற்கொவ்வாத அரசு துறை/ பொது துறை நிறுவனங்கள், அரசு ஊழியரின் அதீத சம்பளம்/ சலுகைகள் / பஞ்சபடி / அதீத போனஸ் / நிர்வாக செலவு இவையெல்லாம் காரணம் இல்லையா பிரதர் ??


அப்பாவி
நவ 15, 2024 03:38

பஞ்சபூதங்கள் வந்து பயமுறுத்துது.


சமீபத்திய செய்தி