மேலும் செய்திகள்
'அவசர போலீஸ் 100'க்கு போன் செய்து அலைக்கழிப்பு
15-Aug-2025
புதுடில்லி:ஏ.சி., இயந்திரத்தில் கம்ப்ரஷர் வெடித்து, ஐந்து பேர் காயமடைந்தனர். வடகிழக்கு டில்லியின் யமுனா விஹாரில் உள்ள, 'பீட்சா ஹட்' கடையில் நேற்று முன் தினம் இரவு ஏ.சி., இயந்திரத்தில் கம்ப்ரஷர் திடீரென வெடித்து தீப்பற்றியது. கடை ஊழியர்கள் மூன்று பேர் உட்பட ஐந்து பேர் காயம் அடைந்தனர். பீட்சா ஹட் செய்தித் தொடர்பாளர் ரிதி கூறியதாவது: எங்கள் கடையின் உள்பகுதியில் தீ விபத்து ஏற்படவில்லை. கடையின் வெளியே உள்ள பிரதான கட்டட வளாகத்தில் இருந்த ஏ.சி., இயந்திரம் நேற்று முன் தினம் இரவு, 9:00 மணிக்கு திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் வாடிக்கையாளர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. கடை ஊழியர்கள் துணிச்சலுடன் போராடினர். காயம் அடைந்த ஐந்து ஊழியர்கள், குருதேவ் பகதூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பஜன்புரா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
15-Aug-2025