உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகாலை நேர பயணத்தால் நேர்ந்த சோகம்; குருகிராமில் தடுப்பு சுவரில் கார் மோதி 5 பேர் பலி

அதிகாலை நேர பயணத்தால் நேர்ந்த சோகம்; குருகிராமில் தடுப்பு சுவரில் கார் மோதி 5 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி-குருகிராம் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புச் சுவரில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது.டில்லி-குருகிராம் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, போலீசார் விரைந்தனர். இந்த விபத்தில் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒரு ஆண் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உத்தரபிரதேசத்திலிருந்து குருகிராமுக்கு, ஆறு பேர் காரில் ஏதோ ஒரு வேலைக்காக வந்திருந்த போது அதிகாலை 4.30 மணிக்கு இந்த விபத்து நிகழந்துள்ளது. ''தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை'' என போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கார் டிரைவர் மது அருந்தி இருந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்து இன்று அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Padmasridharan
செப் 30, 2025 17:28

மற்ற நேரத்திலும் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்தாலோ குடி மயக்கத்தில் இருந்தாலோ கூட விபத்துக்கள் நடக்கும். இந்த செய்தியில் "தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார்" என்று குறிப்பிட்டிருக்கிறது இதனால் கூட விபத்துக்கள் நடக்கும் சாமி. அதி காலை, இரவு பயணங்கள் மட்டுமல்ல.


S SRINIVASAN
செப் 27, 2025 14:59

people buying car without understanding how to drive, when to drive, and what precaution they have to take planning etc., new generation driving people are very much interested in driving at high speed what ever safety measures you bring in that is not going to help if driving is failure


அப்பாவி
செப் 27, 2025 14:45

கதி சக்தி போடு போடுன்னு போடுது.


kumar
செப் 27, 2025 12:35

மக்கள் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.. அதிகாலை தூக்க கலக்கத்தில் கார் ஓட்டி ஐந்து பேர் உயிர் பரிபோனதா வருத்தம் அளிக்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை