உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்; இரு டாக்டர்கள் உள்பட மேலும் 5 பேர் கைது

டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்; இரு டாக்டர்கள் உள்பட மேலும் 5 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக காஷ்மீரைச் சேர்ந்த இரு டாக்டர்கள் உள்பட மேலும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.டில்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக காஷ்மீர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்த அதீல் மற்றும் முசம்மில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றிய மற்றொரு டாக்டரான உமரும் காஷ்மீரில் பணியாற்றி வந்துள்ளான். அதேபோல், இந்த குண்டுவெடிப்பில் பெண் டாக்டரான ஷாயின் சையத் மற்றும் மேலும் இரண்டு டாக்டர்களுக்கும் தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.இவர்கள் நான்கு பேரும், டில்லி அருகே பரிதாபாதில் உள்ள அல் பலாஹ் பல்கலையில் பணியாற்றியது தெரியவந்ததை அடுத்து அந்த பல்கலை புலனாய்வு அமைப்புகளின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. டில்லி குண்டுவெடிப்புசம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், காஷ்மீரைச் சேர்ந்த இரு டாக்டர்கள் உள்பட மேலும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரைச் சேர்ந்த டாக்டர் முகமது ஆரிப் மிர்,32, ஹபூரில் உள்ள ஜிஎஸ் மருத்துவக் கல்லூரி டாக்டர் பரூக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்டவர்களில் ஜமீல் என்பவர் அல் பலாஹ் பல்கலையில் ஊழியராக இருந்து வருகிறார். இவர் ஜம்மு காஷ்மீரில் இருந்து டாக்டர்களை இந்தப் பல்கலையில் வேலைக்கு சேர்த்து விடும் பணியை தொடர்ச்சியாக செய்து வந்துள்ளார்.தற்போது 5 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணைக்காக டில்லி அழைத்துச் சென்றுள்ளனர். அனந்த்நாக்கைச் சேர்ந்த ஆரிப் மிர், கார் குண்டுவெடிப்பை நிகழ்த்திய உமர் நபியுடன் தொடர்பில் இருந்தவர். இவரின் வீடுகளில் இருந்து லேப்டாப், செல்போன் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, டில்லி கார் குண்டுவெடிப்பை நிகழ்த்திய உமர் நபிக்கு சொந்தமாக காஷ்மீரில் இருக்கும் வீட்டை பாதுகாப்பு படையினர் இடித்து தள்ளினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

V RAMASWAMY
நவ 14, 2025 08:18

These are little icbergs, may be there are a lot of radicals behind and therefore, without any slackness the investigation, scrutiny and arrests and strict punishiment of Pak loving radicals living in our Nation and carrying out anti-National activities should be an on going process. Even Government will do well if there are intrusions of such radicals into Government agencies. This apart, our intelligence wing which seems to be weak should be geared with equipped with state-of-the-art sophiscated gadgets, 24 hour vigilance through trained Nationalist intelligent and skilled experts, all over India in all nook and corners.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
நவ 14, 2025 08:03

ஒரு கும்பல் மட்டுமே


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை