உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லாரி மீது கார் மோதி விபத்து 3 டாக்டர்கள் உட்பட ஐவர் பலி

லாரி மீது கார் மோதி விபத்து 3 டாக்டர்கள் உட்பட ஐவர் பலி

லக்னோ, உத்தர பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பியபோது, டாக்டர்கள் வந்த கார், எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில், காரில் சென்ற மூன்று டாக்டர்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். உ.பி.,யின் எட்டாவா மாவட்டம், சாய்பாய் பகுதியில் உள்ள மருத்துவ அறிவியல் பல்கலையில், முதுநிலை மருத்துவ படிப்பு படித்து வந்த நான்கு மாணவர்கள் மற்றும் இரண்டு மருத்துவப் பணியாளர்கள் உட்பட ஆறு பேர் லக்னோவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, 'ஸ்கார்பியோ' காரில் சென்றனர். திருமணம் முடிந்ததும் அவர்கள் காரில் நேற்று சாய்பாய் திரும்பிக்கொண்டிருந்தனர். ஆக்ரா - லக்னோ விரைவுச் சாலையில் வந்தபோது, டிரைவர் துாங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பை உடைத்து மறுபக்கம் பாய்ந்தது. இதில், எதிர்திசையில் வந்த லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் கார் நொறுங்கியது. இதில் சென்ற ஆறு பேரும் பலத்த காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அங்கு, மூன்று டாக்டர்கள் மற்றும் இரண்டு மருத்துவப் பணியாளர்கள் உயிரிழந்தனர். மற்றொருவர் தலையில் காயத்துடன் சிகிச்சை பெறுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை