உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இது ரோடா? இல்ல ஆறா? ஹைதராபாத்தில் சாலையில் பாய்ந்தோடிய வெள்ளம்; 3 பேர் மாயம்

இது ரோடா? இல்ல ஆறா? ஹைதராபாத்தில் சாலையில் பாய்ந்தோடிய வெள்ளம்; 3 பேர் மாயம்

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பெய்த தொடர் கனமழையால் சாலையில் பாய்ந்தோடிய வெள்ளத்தில் பொதுமக்கள் 3 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். மாயமான அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. மேகவெடிப்பு காரணமாக ஹைதராபாத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் கனமழை பெய்தது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அதிகபட்சமாக, சித்திப்பேட்டையில் 24.50 செமீ மழை பதிவாகியுள்ளது. ரங்காரெட்டி மாவட்டத்தில் 12.8 செமீ மழையும், முஷிராபாத்தில் 11.40 செமீ மழையும் பதிவாகியுள்ளது. இந்த திடீர் கனமழை காரணமாக, பார்சிகுட்டா பகுதியில் உள்ள சாலையில் ஆறு போல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், சன்னி என்ற வாகன ஓட்டி, தனது பைக்குடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவரது பைக் மீட்கப்பட்ட நிலையில், சன்னியை காணவில்லை. பாதாள சாக்கடை குழிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் அவரை தேடி வருகின்றனர். இதேபோல, அர்ஜூன்,26, ராமா,28 ஆகிய இருவரும் நம்பள்ளி பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனிடையே, பஞ்சாரா மலையில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு மையத்தில், தனிப்பட்ட முறையில் வெள்ள நிலவரத்தைக் கண்காணித்து வருவதாக ஹைதராபாத் மாநகராட்சி மேயர் விஜயலட்சுமி காட்வால் தெரிவித்தார். மேலும் வெள்ளநீரை அகற்றவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Natarajan Ramanathan
செப் 15, 2025 21:41

முன்பெல்லாம் கனமழை என்று அறிவிப்பார்கள். பிறகு மேலடுக்கு வெப்ப சலனம் என்று சொன்னார்கள். இப்போதெல்லாம் மேக வெடிப்பு என்று கதை விடுகிறார்கள். ஆனால் மழைவெள்ளம் வந்து மக்கள் கஷ்டப்படுவது மட்டும் மாறவே இல்லை.


Tamilan
செப் 15, 2025 20:33

நாடு முழுவதும் திடீர் மழை வெள்ளம் உயிரிழப்பு கோடிக்கணக்கானோர் பாதிப்பு. இஸ்ரோவும் டிரில்லியன் டாலர் அரசும் என்ன செய்துகொண்டிருக்கின்றன ? 26 பேர் இருந்தா அக்கரையில் ஒரு சதவீதம் கூட இல்லை . கேவலம் வியாபார விளம்பர அரசின் கீழ்த்தரமான செயல்கள் விளம்பரங்கள்


Tamilan
செப் 15, 2025 20:26

டெல்லியைப்பார்க்கும்போது புரியாதவர்களுக்கு இப்போதாவது புரிந்தால் சரி . திராவிடம் புரியவைத்திருக்கிறது


Artist
செப் 15, 2025 13:32

சென்னை இந்த வருடம் தப்பிக்குமா ? முதல்வர் களப்பணிகளை ஆய்வு செய்ய ரெயின்கோட் மற்றும் கம்பூட் வாங்கி வைக்க வேண்டிய தருணம் இது


Chandru
செப் 15, 2025 21:13

indha monsoon kizhinjudhu krishnagiri


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை