உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத சக்திகள்: துணை ஜனாதிபதி பேச்சு

இந்தியாவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத சக்திகள்: துணை ஜனாதிபதி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் இந்தியாவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத சக்திகள் உள்ளன,'' என துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கரை பதவியில் இருந்து நீக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ' இண்டியா' கூட்டணி கட்சிகள் கொண்டு வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.இந்நிலையில், டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜக்தீப் தன்கர் பேசியதாவது: நாட்டை துண்டாட நினைக்கும், பிளவுபடுத்த நினைக்கும், நாட்டின் அமைப்புகளை அவமானப்படுத்தும் செயல்கள் திட்டமிடப்பட்டு வருகின்றன. தேசத்திற்கு எதிராக நடக்கும் ஒவ்வொரு செயல்களையும் நாம் முறியடிக்க வேண்டும்.பொருளாதார ரீதியில் நாடு வளர்ச்சி பெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதாரம் தள்ளாட்டத்தில் இருந்தது. இன்று பெரிய பொருளாதார நாடுகளில் ஐந்தாவது இடத்தில் இந்தியா உள்ளது. இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும். 2047 ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்பது கனவு அல்ல. அது நமது லட்சியம். இது நிச்சயம் நிறைவேறும். இந்தியாவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத சக்திகள், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ளனர். தேசப்பற்றில் நாம் ஒரு போதும் சமரசம் செய்யக்கூடாது. நாட்டில் உள்ள ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியுடனும், வளர்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்பது தேசப்பற்றில் உள்ளார்ந்ததாக உள்ளது. இதற்கு குடிசைத் தொழில், கிராமப்புறத் தொழில் மற்றும் சிறுகுறு தொழில்களை நோக்கி நமது கவனம் செல்லும் போதே சாத்தியமாகும்.கல்வியும் திறனும் முக்கியமாகும். நீண்ட நாட்களுக்குப் பிறகு புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டு உள்ளது. இதில், திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். நமக்கு என உரிமைகள் உள்ளன. அவற்றுடன் கடமை உணர்வும் இருக்க வேண்டும். இவ்வாறு ஜக்தீப் தன்கர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

CA.S.Karthigeyan
டிச 13, 2024 19:26

அடுத்த ஜனாதிபதி பதவிக்கு விண்ணப்பம் செய்கிறார். கண்டு கொள்ளாதீர்கள்.


Venkatesan Srinivasan
டிச 12, 2024 10:44

குஜராத் வியாபாரியுடன் வியாபாரம் செய்தால் அங்குதான் செல்லும். ஆந்திராவிற்கு செல்லாது.


அப்பாவி
டிச 12, 2024 09:44

அப்போ எதுக்கு அந்நிய முதலீட்டாளர்கள் டிரில்லியன் டாலர் கணக்கில் இங்கே முதலீடு செய்யறாங்க? ரூம் போட்டு யோசிங்க.


அப்பாவி
டிச 12, 2024 09:42

இத்தனை நாள் நேருதான்னு காரணம் சொல்லிக் கிட்டிருந்தவங்க இப்போ இண்டர்நேஷனல் காரணங்கள் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. இதுதான் பரிணாம வளர்ச்சி.


James Mani
டிச 12, 2024 10:50

சார்


அப்பாவி
டிச 12, 2024 08:02

உள்ளூரில் லஞ்சம் குடுத்து வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்குது. வளர்ச்சியோ வளர்ச்சி.


பேசும் தமிழன்
டிச 12, 2024 07:34

உண்மை தான்.... வெளிநாட்டு சக்திகள்.... இங்கே இருக்கும் அவர்களின் கைகூலிகள் மூலம்.... இந்தியாவில் எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்தி விடலாம் என்று முயற்சி செய்து வருகிறார்கள்..... அதற்க்கு இங்கே இருக்கும் போலி காந்தி கும்பல் துணை போகிறது.... அவர்களை மக்கள் வெறுத்து ஒதுக்க வேண்டும்.


முருகன்
டிச 12, 2024 06:27

எதில் வளர்ச்சி என்று புரியும் படி சொல்ல முடியுமா


Dharmavaan
டிச 12, 2024 07:33

குருடனுக்கு மூடனுக்கு புரியாது


Kasimani Baskaran
டிச 12, 2024 06:20

துணை ஜனாதிபதி மீது குற்றம் சுமத்த காங்கிரசுக்கு அதீத தைரியம் வந்துவிட்டது. இது கிட்டத்தட்ட ஐநா சபையை கலைக்க தமிழக சட்டசபையில் தீர்மானம் போட்டது போலத்தான்.


Saleem
டிச 12, 2024 05:22

இந்தியவின் வளர்ச்சியை தடுக்கும் உள்நாட்டு சக்தி எது வெளிநாட்டு சக்தி எது என்பதை வெளிப்படையாக சொல்லவேண்டும்


Dharmavaan
டிச 12, 2024 07:34

அது அரசியல் ஆகிவிடும் இவர் சொல்ல முடியாது


பேசும் தமிழன்
டிச 12, 2024 07:37

உள்நாட்டு சக்தி..... போலி காந்தி கும்பல் தலைமையில் இயங்கும் இந்தி கூட்டணி.... வெளிநாட்டு சக்தி அமெரிக்கா சோரஸ் மற்றும் சீனா காங்கிரஸ் ஒப்பந்தம் .


Venkatesan Srinivasan
டிச 11, 2024 23:09

இந்த கருத்து வெறும் எச்சரிக்கை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள முடியாது. அரசியல்வாதிகள் போர்வையில் உலவும் உள்நாட்டு எதிரிகள் ஒழித்துக்கட்ட வேண்டும். அத்தகைய குற்றவாளிகளுக்கு ஜனநாயக சட்டங்கள் உரிமைகள் பொருந்தாது. மிகவும் கடுமையான தண்டனை சட்டங்கள் மட்டுமே பிரயோகிக்க வேண்டும். தேசவிரோத நயவஞ்சகர்கள் தண்டனைக்கு பயந்து தங்கள் செயல்பாடுகளை கைவிட வேண்டும். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே.


Senthoora
டிச 12, 2024 05:59

இந்தியாவுக்கு நல்லபெயர் இருக்கு, அதை கெடுக்கசில ஆளும்கட்ச்சியினர் முனைவதுதான் வருத்தம்,


சமீபத்திய செய்தி