உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கைப்பிடியும் கடத்தலுக்கு ஆயுதம்; சுருள் சுருளாக சுருட்டி ரூ.64 லட்சம் கரன்சி கடத்தியவர் கைது!

கைப்பிடியும் கடத்தலுக்கு ஆயுதம்; சுருள் சுருளாக சுருட்டி ரூ.64 லட்சம் கரன்சி கடத்தியவர் கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: 'வெளிநாட்டில் இருந்து மும்பை வந்த விமான பயணியின் ட்ராலி பேக் கைப்பிடிக்குள் சுருள் சுருளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பயணி கைது செய்யப்பட்டார்.மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள சி.எஸ்.எம்.ஐ., விமான நிலையத்தில், தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் கடத்தப்படுவதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. விமான நிலையத்தில், அக்டோபர் 4 மற்றும் 5ம் தேதிகளில் இரவு, அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது, ஒரு பயணி உடலில் மறைத்து, 1.165 கிலோ தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த பயணியிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு பயணி, ட்ராலி பேக் கைப்பிடிக்குள் காலியாக இருக்கும் இடத்தில் வெளிநாட்டு கரன்சி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை சுருள் சுருளாக சுருட்டி, கைப்பிடிக்குள் திணித்து கொண்டு வந்துள்ளார். சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தில் நடத்திய சோதனையில், அமெரிக்க டாலர்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பயணியை அதிகாரிகள் கைது செய்து, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

p karuppaiah
அக் 06, 2024 14:55

மிகவும் சரி


Mohan
அக் 06, 2024 12:44

எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு கடத்தல் தங்கம், பணம் பிடித்தார்கள் சரி, அது எப்படி இன்னாருடைய சூட்கேஸ் கைப்பிடிக்குள் பணம் இருப்பது தெரியும்.? உலோகம் எக்ஸ் ரேயில் தெரிகிறது, பேப்பர் எப்படி தெரியும்? யாராவது போட்டுக் கொடுத்திருப்பாங்களோ ? பிடிக்கிறாங்கன்னு தெரிஞ்சும் தங்கம் கடத்தல் நடந்து கொண்டே இருக்கிறது. என்னுடைய ஊகம் என்னன்னா, குறைவான தங்கத்தை தகவலை வைத்து பிடிப்பது, அதிக அளவு தஙகத்தை கண்டுக்காம விட்டு சைடு இன்கம் பார்ப்பது, இது நம்ம நாட்டு சமபந்தப்பட்ட ஊழியர்களுக்கே உரிய டெக்னிக்காக இருக்குமோ என்ற ஆதாரம் கிடைக்காத டவுட் வருகிறது.


subramanian
அக் 06, 2024 09:52

குறுக்கு வழியில் சென்றால் இதுதான் நடக்கும். ஆனால் திமுக எல்லா வகையிலும் தவறான செயல் செய்துவிட்டு எப்படி தப்பிக்க றார்கள்?


raja
அக் 06, 2024 10:26

சர்காரியாவே சொல்லி இருக்காரே...


Ganesun Iyer
அக் 06, 2024 10:40

அவர்கள் தமிழர்கள் அல்லாதவரால்... தப்பிக்க முடிகிறது


ramesh
அக் 06, 2024 11:07

முதலில் உங்கள் ஆட்களின் யோக்கியதையை சொல்லிவிட்டு மற்றவர்களை குறை கூறுங்கள்


சாண்டில்யன்
அக் 06, 2024 12:35

ஜெயாவால்தான் தப்பிக்க முடியவில்லை முடிவில் உயிரைவிட்டு நூறு கோடி அபராதத்திலிருந்து மட்டுமே தப்பினார் அதன் பலனை அடைந்தது யாரோ ? இது வேறெந்த கட்சி அரசியல்வாதியும் பெறாத ஒரு கின்னஸ் ரெக்கார்ட்.


Dharmavaan
அக் 06, 2024 13:20

ஜெயா தீர்ப்பு நீதியின் கேவலம் பாரபட்சம் கட்டுமரத்துக்கு ஏன் அதுபோல் விசாரை தண்டனை இல்லை. ரோடு சைடு பாரதி சொன்னது போல் போட்ட பிச்சைக்கு எதிர் வெகுமதியோ


சமீபத்திய செய்தி