உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு பங்களாவை காலி செய்யாத விவகாரம்: மூட்டை கட்டி விட்டேன் என்கிறார் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்

அரசு பங்களாவை காலி செய்யாத விவகாரம்: மூட்டை கட்டி விட்டேன் என்கிறார் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'பெட்டிகள் பேக் செய்யப்பட்டு விட்டன. விரைவில் அதிகாரபூர்வ இல்லத்தில்இருந்து வெளியேற உள்ளேன்,' என்று சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறினார்.உச்ச நீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த சந்திரசூட், கடந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெற்றார். 6 மாதங்களுக்கு மேலாகியும் அவர் இன்னும் அரசு பங்களாவை காலி செய்யாமல் இருப்பதாக புகார் எழுந்தது.இதுதொடர்பாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு சுப்ரீம் கோர்ட் செயலகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டது. 'முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு வழங்கப்பட்ட அரசு பங்களாவின் அனுமதி மே 31ம் தேதியுடன் முடிவடைந்தது. இருப்பினும், பங்களாவைவிட்டு அவர் காலி செய்யவில்லை. ஆகையால், எண் 5, கிருஷ்ணா மேனன் மார்க் பங்களாவில் இருந்து சந்திரசூட்டை வெளியேற வைத்து, பங்களாவை ஒப்படைக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறியதாவது:நாங்கள் உண்மையில் எங்களது பெட்டி,படுக்கைகளை பேக் செய்துவிட்டோம். அனைத்து பொருட்களும் முழுமையாக பேக் செய்யப்பட்டுள்ளன. சில சாமான்கள் ஏற்கனவே புதிய வீட்டிற்குச் சென்றுவிட்டன, சில இங்கே ஸ்டோர்ரூமில் வைக்கப்பட்டுள்ளன.நவம்பர் 8, 2024 அன்று தனது அலுவலகத்தில் இருந்து ஓய்வு பெற்ற எனக்கு, அதிகாரப்பூர்வ பங்களாவை காலி செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற நிர்வாகம் அனுப்பிய கடிதம் அனுப்பியது. அதற்கு பதிலளித்து நான் எழுதிய கடிதம் எழுதி விட்டேன். இந்த பிரச்னையால் எனக்கு வருத்தம் தான். எனது மகள்கள் பிரியங்கா மற்றும் மஹி இருவரும் மாற்றுத்திறன் கொண்ட சிறப்பு குழந்தைகள். அவர்களுக்கு சிறப்பு தேவைகள் உள்ளன. அவர்களுக்கு ஏற்றவாறு வீடு தேவைப்படுகிறது. அதை என்னால் மட்டுமே உணரமுடியும். எப்படி உணர்கிறேன் என்று நான் உங்களுக்கு தெரிவிக்க இயலாது. நான் உங்களுக்கு குறிப்பிட விரும்பும் விஷயம் என்னவென்றால், மகள்கள் இருவருக்கும் அரிதான மரபணு கோளாறு இருப்பது உங்களுக்கு தெரியும். சாதாரண வீட்டில் கூட உயர்தர சுகாதாரம் ஆகியவற்றை பராமரிக்கிறோம். இவர்களை கவனித்துக்கொள்ள ஒரு சிறப்பு செவிலியர் எங்களுடன் உள்ளார். இந்நிலையில் வீட்டை காலி செய்ய சில வாரங்கள் கூட ஆகலாம். புதிய வீடு தயாராகி வருகிறது. விரைவில் அங்கு சென்று விடுவேன்.இவ்வாறு சந்திரசூட் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ஆரூர் ரங்
ஜூலை 08, 2025 15:33

ஒய்வுபெறப்போகும் தேதியை மறந்து விட்டார். வக்கீலாக இருந்த போதும் வருமானமில்லை போலிருக்கிறது.


அருண், சென்னை
ஜூலை 08, 2025 08:27

ஷாருகான் மகன் போதை பொருள் விவகாரத்து வழக்கில் விடுதலைக்கு வீடே கட்டிகொடுத்திருப்பாரே?இல்லையா? டிசம்பர் இறுதிக்குள் சொந்த வீடே கட்டி இருக்கலாமே? இப்போ காரணம் சொல்லி என்ன ப்ரோஜணம்? கொளண்ஞ்யம் பரிந்துரைக்கும் போதே தெரியாதா? இதற்கு முன்பு சொந்த வீட்டில்தானே இருந்திருப்பார்?


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூலை 08, 2025 04:12

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் தங்கி இருந்த அரசு பங்களாவை காலி செய்ய தாமதமானதற்கு இவ்வளவு பெரிய கடிதம் எதற்கு ??? சாதாரண தனியார் கம்பெனியில் வேலை பார்பவரே சொந்த வீடு வைத்திருக்கும் போது இவருக்கென்று இது வரை சொந்த வீடே இலைலையா ??? இத்தனை காலம் வாடகை வீட்டில் தான் வசித்தாரா ?? தம் இரண்டு மகள்களும் மாற்று திறனாளிகளாக இருப்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான வகையில் வீடு வாங்கி அவர்களுக்கு தகுந்தாற்போல் வசதிகள் செய்து கொணடிருக்களாமே.... உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தவருக்கு சொந்த வீடு கட்டுவது அவ்வளவு பெரிய கஷ்டமான காரியம் இல்லையே .... தன் மீது தவறை வைத்துக்கொண்டு மாற்றுத்திறனாளிகளான தம் மகள்களை காரணம் காட்டுவது தலைமை நீதிபதியாக பதவி வகித்தவருக்கு அழகில்லை....!!!


Ganapathy
ஜூலை 08, 2025 00:40

இன்றைய மார்கெட் வாடகையை வசூலிக்கவும். மக்களின் வரியியில் மஞ்சள் குளிக்கும் சீன காந்தி கைகூலிகளுக்கு சலுகை எதற்க்கு?


Krishna Gurumoorthy
ஜூலை 08, 2025 00:23

தேவையில்லாத அரசியல் செய்கிறது உச்ச நீதிமன்றம்


G.BABU
ஜூலை 07, 2025 21:45

புரிந்து கொள்ளக்கூடிய சூழல் .உணர்வுபூர்வமாக சிந்தித்து , உளப்பூர்வமாக ஆராயும்போது ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணம் .


Santhakumar Srinivasalu
ஜூலை 07, 2025 21:36

மாற்றுத்திறனாளிகளான அவர்கள் மகள்களுக்கு சுகாதாரமான வீடு தேடும் அவரை விமர்சனம் செய்வது சிறிதும் மனிதாபிமானம் இல்லாத செயல்!


தாமரை மலர்கிறது
ஜூலை 07, 2025 21:20

சிறப்பாக செயல்பட்ட நீதிபதி சந்திரசூட்டிற்கு அரசு பங்களா ஒதுக்குவது அவசியம். விரைவில் மத்திய அரசு பதவி வழங்கி கௌரவிக்க வேண்டும்.


subramanian
ஜூலை 07, 2025 21:12

நாட்டின் மிகவும் உயர்ந்த பதவியில் இருந்தவர். காரணம் சொல்லி விட்டார். அவருக்கு வருத்தம் உண்டாக்க வேண்டாம்.


Oviya Vijay
ஜூலை 07, 2025 20:51

தன் பதவிக் காலத்தில் சங்கி அரசாங்கத்திற்கு ஒத்து ஊதாமல் தைரியமாகத் தன்னுடைய கருத்துக்களை முன் வைத்தவர்... ஆகையால் அவரை அசிங்கப்படுத்த நினைத்து தற்போது அசிங்கப்பட்டு நிற்கிறது மத்திய அரசு... அவர் ஒன்றும் அனாவசியமாக அரசு சலுகைகளை அனுபவிக்க நினைக்கும் கேடுகெட்ட அரசியல்வாதி அல்ல...


Natarajan Ramanathan
ஜூலை 07, 2025 22:35

இவ்வளவு வக்கணையாக பேசுபவர் ஏன் கெடு தேதிக்கு முன்பாகவே வீட்டை காலி செய்து கௌரவமாக போய் இருக்கக்கூடாது? ஆறு மாதம் என்பது நல்ல அவகாசம்தான்.


முக்கிய வீடியோ