உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் காலமானார்!

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் காலமானார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கஸ்துாரிரங்கன், 84, வயது மூப்பு காரணமாக, பெங்களூருவில் இன்று (ஏப்ரல் 25) காலமானார்.கேரளாவில் அக்டோபர் 24ம் தேதி 1940ம் ஆண்டு கஸ்துாரிரங்கன் பிறந்தார். 1994ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பான 'இஸ்ரோ'வின் தலைவராக இருந்தார். இவரது பணிக்காலத்தில் இஸ்ரோ புதுப்புது சாதனைகளை படைத்து சர்வதேச அளவில் புகழ்பெற்றது.பணி ஓய்வுக்கு பிறகு, ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணிபுரிந்துள்ளார்.இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ , பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் ஆகிய 3 உயரிய விருதுகளை வழங்கியுள்ளது. ராஜ்யசபா உறுப்பினராகவும், மத்திய திட்டக்குழு உறுப்பினராகவும் கஸ்துாரி ரங்கன் பணியாற்றினார்.கஸ்தூரிரங்கன் தலைமையில் உருவாக்கப்பட்ட வரைவுக் குழுவின் பரிந்துரைகளின் படியே புதிய கல்விக் கொள்கை 2020ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு விரிவான அறிக்கை சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.பிரதமர் இரங்கல்கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடிவெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் அறிவியல் மற்றும் கல்விப் பயணத்தில் மிகவும் போற்றத்தக்கவராக இருந்த கஸ்தூரி ரங்கனின் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய அவரது தலைமைப் பண்பு மற்றும் தேசத்துக்கான தன்னலமற்ற சேவை மக்களால் என்றென்றும் நினைவில் கொள்ளப்படும். இஸ்ரோவில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய அவர், இந்தியாவின் விண்வெளித் திட்டத்தை விடாமுயற்சியுடன் புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றார். இது நாட்டுக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைக்க வழிவகுத்து. அவரது சீரிய தலைமைப் பண்பு நாட்டின் லட்சியமான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தப்படுவதை செயலாக்கியது.

பிரதமர் இரங்கல்

கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் அறிவியல் மற்றும் கல்விப் பயணத்தில் மிகவும் போற்றத்தக்கவராக இருந்த கஸ்தூரி ரங்கனின் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய அவரது தலைமைப் பண்பு மற்றும் தேசத்துக்கான தன்னலமற்ற சேவை மக்களால் என்றென்றும் நினைவில் கொள்ளப்படும். இஸ்ரோவில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய அவர், இந்தியாவின் விண்வெளித் திட்டத்தை விடாமுயற்சியுடன் புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றார். இது நாட்டுக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைக்க வழிவகுத்து. அவரது சீரிய தலைமைப் பண்பு நாட்டின் லட்சியமான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தப்படுவதை செயலாக்கியது. இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Kamatchi Narayanan
ஏப் 25, 2025 19:55

Ohm Shanthi


வாழ்க பாரதம்!
ஏப் 25, 2025 18:19

ஆத்மா சாந்தியடைய அன்பு பிரார்த்தனைகள் ஓம் சாந்தி ஓம் சாந்தி


R S Devarajan
ஏப் 25, 2025 17:32

om shanthi


Ramakrishnan R
ஏப் 25, 2025 17:23

திரு கஸ்தூரி ரங்கன் அவர்களின் பதாண்டுக்கால தலைமையில், விண்வெளித்துறை பல அரிய சாதனைகளைப் புரிந்தது. கல்வித்துறையிலும் அவரின் பங்கு சிறப்பானது. அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்


M R Radha
ஏப் 25, 2025 16:37

நம்பி நாராயணனை கழுத்தறுத்தவர். தவறாக நம்பியை கேரளா போலீஸ் கைது செய்தபோது ரங்கன் சப்போர்ட் செய்வதற்கு பதில் ஒதுங்கி கொண்டார்


ram
ஏப் 25, 2025 14:37

ஓம் ஷாந்தி


பாமரன்
ஏப் 25, 2025 14:27

ஆன்மா சாந்தியடையட்டும்... இவரின் பங்களிப்பு விண்வெளி ஆராய்ச்சியில் பாராட்டுக்குரியது...


M R Radha
ஏப் 25, 2025 16:40

நம்பி நாராயணனனுக்கு ரங்கன் அக்காலத்தில் உதவியிருந்தால் இஸ்ரோ இன்று நாசாவையும் விஞ்சியிருக்கும்


பிரேம்ஜி
ஏப் 25, 2025 14:03

ஓம் சாந்தி!


குமார், மதுரை
ஏப் 25, 2025 13:37

ஓம் சாந்தி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை