உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் 101, இன்று உடல்நல குறைவால் காலமானார்.கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் வயது மூப்பு காரணமாக பொது வாழ்க்கையில் இருந்து விலகி ஓய்வில் இருந்தார்; ஏற்கனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qywwl5qv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் திருவனந்தபுரம் மருத்துவமனையில் உள்ள அச்சுதானந்தன் உடல் நலன் குறித்து முதல்வர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கோவிந்தன் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.அப்போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்பட்டது.கடந்த சில மணி நேரங்களாக அவரது ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்ட நிலையில் அச்சுதாநந்தன் இன்று மாலை காலமானார்.அச்சுதானந்தன் வரலாறு:அச்சதானந்தன் கேரள மாநிலத்தின் 20வது மற்றும் முன்னாள் முதல்வர் ஆவார். 2006 முதல் 2011 வரை மாநிலத்தின் முதல்வராக பணியாற்றினார்.2011ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் இவரது கூட்டணி அறுதிப் பெரும்பான்மையைப் பெறாததால் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினார். கேரள அரசியலில் நீண்ட காலம் எதிர்க்கட்சி தலைவர் பதவி வகித்த பெருமைக்குரியவர். 15 ஆண்டுகள் இவர் அந்த பதவியில் இருந்தார்.தொழிற்சங்க ஈடுபாட்டின் மூலம் அரசியலுக்கு வந்த அச்சுதானந்தன், 1938ம் ஆண்டு மாநில காங்கிரஸில் சேர்ந்தார். கருத்து வேறுபாடுகளால், 1940ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து வெளியேறி இ.கம்யூ., உறுப்பினர் ஆனார். 1964ம் ஆண்டு, இ.கம்யூ., கட்சியிலிருந்து பிரிந்து சென்று மார்க்சிஸ்ட் கட்சியை நிறுவிய 32 உறுப்பினர்களுள் இவரும் ஒருவர்.1985 முதல் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினராக இருந்து வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Narayanan K
ஜூலை 22, 2025 07:48

A rare and real Communist. Salute.


ஆரூர் ரங்
ஜூலை 21, 2025 20:01

தேசபக்தர் . 1962 சீன யுத்தம் நடந்த போது கம்யூனிஸ்டு கட்சியின் கட்டுப்பாட்டை மீறி எல்லோரும் நமது வீரர்களுக்கு ரத்த தானம் தர வேண்டும் எனக் கூறினார். இதற்காக கட்சிப் பதவியையும் இழந்தார் .


Kulandai kannan
ஜூலை 21, 2025 19:41

திராவிடமாகட்டும் கம்யூனிஸ்ட் ஆகட்டும், உடலுக்கு ஒரு நோவு என்றால் தனியார் மருத்துவனைதான்.


Sundar R
ஜூலை 21, 2025 18:02

அச்சுதானந்தன் அவர்கள் நேர்மையானவர். கைசுத்தமானவர். இவருடைய 90 வயதிற்கு மேலும், நன்கு நடமாடக்கூடிய அளவுக்கு பரிபூரண ஆரோக்கியவானாக இருந்தார். இவர் கேரள முதலமைச்சராக பதவியில் இருந்த போது திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு, சபரிமலையில் பக்தர்களுக்கு செய்த ஏற்பாடுகளில் குறைபாடுகள் உள்ளதாக அன்றாடம் ஒரு நான்கு நாட்களுக்கு தொடர்ந்து நாளிதழ்களில் செய்தி வந்தது. அதைப் பார்த்த உடனேயே, அச்சுதானந்தன் அவர்கள் பம்பா கணபதி கோயிலிலிருந்து, சன்னிதானம் வரை மலை ஏறி நடந்தே சென்று, பக்தர்களிடம் நேரிலேயே குறைகளைக் கேட்டறிந்து, அந்த குறைகளைக் களைய உரிய ஏற்பாடுகளைச் செய்து பக்தர்களின் பாராட்டுகளைப் பெற்றார். பிறக்கும் போதே கம்யூனிஸ்ட்டாகப் பிறந்த சில கம்மீஸ் அச்சுதானந்தன் அவர்களைப் பற்றி, "ஒரு கம்யூனிஸ்ட் நேதா, அதிலேயும் நம்முட சமஸ்தானத்தின் முக்கிய மந்திரி ஐயப்பன் அம்பலத்திற்கு போகலாமா?" என்று இவரை குறை கூறினார்கள். ஆனால், இவர் அதைப்பற்றி எல்லாம் சட்டை பண்ணவில்லை. இவரைப் பற்றி குறை சொல்ல வேண்டும் என்றால், அந்த காலத்தில் அநியாயமாக கேரளத்தில் நடந்த முன்னறிவிப்பு இல்லாத ஸ்ட்ரைக், பந்த் இவரும் பலமுறை தலைமை ஏற்று நடத்தியிருக்கிறார். வேறு குறையே சொல்ல முடியாது. காரணம் இவர் தன்னுடைய கம்யூனிஸ்ட் வாழ்க்கையில் ஈஎம்எஸ் நம்பூதிரி பாட், வி. ஆர். கிருஷ்ண ஐயர் ஆகியோருடன் நெருங்கி பயணித்தவர். அச்சுதானந்தன் அவர்கள் மறைந்து விட்டார் என்ற வருத்தத்தைத் தவிர இன்னொரு வருத்தம் உண்டு. கேரள கம்யூனிஸ்டு சரித்திரத்தில் ஆரம்பம் முதல் இன்றுவரை கை சுத்தமான தலைவர் என்பது அச்சுதானந்தன் அவர்களோடு போய்விட்டது. இப்போது இருக்கும் கம்யூனிஸ்டுகள் காசு வாங்குவது முதல் தங்கம் கடத்துவது வரை எல்லா தவறுகளையும் செய்வதை நாளிதழ்களில் வரும் செய்திகளில் பார்க்க முடிகிறது.


Amar Akbar Antony
ஜூலை 21, 2025 17:45

எளிமைக்கு உதாரணமாக இருந்தவர். அதிகம் கோபப்படமாட்டார். அரசியலில் கொஞ்சமாவது நேர்மை வேண்டும் என்பதில் ஈ கே நாயனாரும் இவரும் முன்னிலிருந்தவர்கள். இவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.


Ganapathy Subramanian
ஜூலை 21, 2025 17:39

மிகவும் நேர்மையான ஒரு முதல்வர். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாமல் ஒரு ஆட்சியை நடத்தியவர். இவரைப்போன்ற நேர்மையான ஆட்சியை நடத்தியவர்கள் வெகு சிலரே.


M. PALANIAPPAN, KERALA
ஜூலை 21, 2025 17:22

கம்யூனிஸ்ட் கட்சியில் அனைவரும் பொதுவாக மோசமானவர்கள், ஆனாலும் அதில் சில நல்ல தலைவர்கள் இருந்தார்கள் அதில் ஒரு நபர்தான் அச்சுதானந்தன் அவர்கள், மூணார் ஆக்கிரமிப்பு ஏரியாவை அரசுடமை ஆக்குவதற்கு ஒரு நல்ல முயற்சி எடுத்தார் அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார், மனதினுள் பட்டதை கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே வெளிப்படையாக பேசி விடுவார், 102 வயது வரை வாழ்ந்தார் அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்


Thravisham
ஜூலை 21, 2025 16:59

கேரளத்தின் தொழில் துறையை நசுக்கியத்தில் இவர் பங்கு மிக அதிகம். தொழிலாளர் குடும்ப அடுப்பு அணைத்தற்கு மிக முக்ய காரண கர்த்தா


ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
ஜூலை 21, 2025 19:35

கேரளளம் கடவுளின் தேசமென்று போற்றப்படுவதற்கு நச்சு தொழிற்சாலைகள் இல்லாததுதான் காரணம். மலையாளிகள் அவர்களின் இயற்கை வளங்களின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்கள். நம் தமிழர்களைப்போல் நாதாரிகள் கிடையாது. அவர்கள் மரங்களை வெட்டுவதில்லை, மலைகளை உடைப்பதில்லை, ஆறுகளை சாக்கடையாக மாற்றுவதில்லை மற்றும் குளங்களை ஆக்ரமதிப்பதில்லை. ஆனால் இவற்றையெல்லாம் தமிழர்கள் சர்வ சாதாரணமாக செய்கிறார்கள். எது எப்படியோ அச்சுதானந்தன் அவர்களின் ஆன்மா இறைவனடி சேர வேண்டுகிறேன்.


A viswanathan
ஜூலை 21, 2025 19:39

அன்னாரது ஆத்மா சாந்தி அடைய‌ இறைவனை வேண்டுகிறேன்.


PR Makudeswaran
ஜூலை 21, 2025 19:54

அது உங்கள் கருத்து. கேரளத்தில் என்றுமே தொழில் துறை உருப்பட்டதில்லை. இந்தியாவில் கம்ம்யூனிஸ்ட் என்று உறுப்பட்டது?? எங்கு உறுப்பட்டது.கொஞ்ச காலம் மே.வங்கத்தில் ஜோதி பாசு காலத்தில்