உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோவா முன்னாள் எம்.எல்.ஏ., கர்நாடகாவில் கொலை: ஆட்டோ டிரைவர் கைது

கோவா முன்னாள் எம்.எல்.ஏ., கர்நாடகாவில் கொலை: ஆட்டோ டிரைவர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெலகாவி: கர்நாடகாவின் பெலகாவியில் ஆட்டோ டிரைவரால் தாக்கப்பட்ட கோவா முன்னாள் எம்.எல்.ஏ., லாவூ மம்லேதர் உயிரிழந்தார்.கோவா மாநில முன்னாள் எம்.எல்.ஏ., லாவூ மம்லேதர், 68, பெல்காவி காதே பஜாரில் உள்ள ஹோட்டல் ஸ்ரீனிவாஸில் முகாமிட்டிருந்தார். இன்று பிற்பகலில் ஹோட்டல் வளாகத்திலிருந்து தனது காரில் வெளியே வரும்போது, ​​அவரது கார் ஆட்டோ மீது மோதியது. இதனால் அவருக்கும் ஆட்டோ டிரைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது திடீரென ஆட்டோ டிரைவர், லாவூ மம்லேதரை தாக்கினார். இந்த தாக்குதலில் அவர் உயிரிழந்தார். ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து, அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.சம்பவம் குறித்து காவல்துறை துணை ஆணையர் ரோஹன் ஜெகதீஷ் கூறியதாவது:இந்த தாக்குதல் சம்பவம் நடந்த இடத்தில் சி.சி.டி.வி.,யில் பதிவாகி இருந்தது.அதில் ஆட்டோ டிரைவர், மம்லேதரை பலமுறை தாக்குகிறார். இதனையடுத்து அவர் ஹோட்டலுக்குள் நடந்து சென்றார். பின்னர் அங்குள்ள வரவேற்பறையில் சரிந்து விழுந்தார். சிகிச்சைக்காக பெலகாவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.கொலை வழக்குப் பதிவு செய்துஆட்டோ டிரைவரை கைது செய்துள்ளோம். மேற்கொண்டு விசாரணை நடக்கிறது.இவ்வாறு ரோஹன் ஜெகதீஷ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

நிக்கோல்தாம்சன்
பிப் 16, 2025 03:36

குற்றவாளி பெயர் என்னவென்று எழுதாமல் விட்டதில் இருந்து என்ன தெரிகிறது ? பிள் ஆப் தி ப்ளாங்க்ஸ்


m.arunachalam
பிப் 15, 2025 22:05

வெறி நாய்கள் அதிக அளவில் பெருகிவிட்டது .


Ramesh Sargam
பிப் 15, 2025 21:17

தமிழகத்தை அடுத்து, கர்நாடகாவும் மக்கள் வாழத்தகுதி அற்ற மாநிலமாக மாறிக்கொண்டு வருகிறது. தமிழகத்தில் திமுக என்றால், கர்நாடகாவில் காங்கிரஸ். இரண்டு கட்சிகளும் அந்த I.N.D.I.A. கூட்டணி கட்சியினர் என்பது எல்லோருக்கும் தெரியும்.


Bala
பிப் 15, 2025 21:52

திரு ரமேஷ் நான் உங்கள் கருத்திலிருந்து மாறுபடுகிறேன். இதுபோன்ற ஆட்கள் எல்லா மாநிலங்களிலும் ஏன் எல்லா நாடுகளிலும் ஒரு சிலர் இருப்பார்கள். நல்ல ஆட்டோ ஓட்டுனர்கள் தமிழகத்தில் பலபேர் இருக்கிறார்கள்


V வைகுண்டேஸ்வரன்
பிப் 15, 2025 23:14

என்ன பைத்தியகாரத் தனமா எழுதறீங்க?? எவனோ ஒரு ஆட்டோ டிரைவர், ஒருவரை கொலை செய்ததற்கும் ஆட்சியாளர்களுக்கும் என்ன சம்பந்தம்? கர்ணாடகா எவ்வளவு பெரிய மாநிலம் தெரியுமா?


Smbs
பிப் 15, 2025 21:11

அதே முறையில் அவனும் சாகனும். தற்போதய சூழலில் அரபு நாட்டு சட்டங்கள் இங்கு வேணும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை