உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய பிரஜை என பொய் சொன்ன முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு அபராதம்

இந்திய பிரஜை என பொய் சொன்ன முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு அபராதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத் : தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ்., எனப்படும் பாரத ராஷ்ட்ரீய சமிதியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., சென்னமனேனி ரமேஷ், ஜெர்மனி நாட்டு குடிமகன் என உறுதியானதை அடுத்து, அவருக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்படுவதற்கு முன், அன்றைய ஒருங்கிணைந்த ஆந்திராவில், 2009ல் நடந்த சட்டசபை தேர்தலில், வெமுலவாடா தொகுதியில் தெலுங்கு தேசம் சார்பில் சென்னமனேனி ரமேஷ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.ஜெர்மனி நாட்டு குடிமகனான இவர், உண்மை தகவல்களை மறைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாகக் கூறி, அவரிடம் தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் ஆதி ஸ்ரீனிவாஸ், தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில், 'ஒருவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றாலும், ஓட்டளிக்க வேண்டும் என்றாலும் அவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.அவர் இந்திய குடியுரிமை பெற வேண்டுமெனில், குடியுரிமை கேட்டு விண்ணப்பித்த பின், தொடர்ச்சியாக ஓராண்டு இந்தியாவில் வசித்திருக்க வேண்டும். 'ஆனால், ஜெர்மனி பாஸ்போர்ட் வைத்துள்ள ரமேஷ், இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பித்த ஓராண்டுக்குள் வெளிநாடு சென்று விட்டார்' என, குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த சூழலில், 2010 - 2018 வரை நடந்த இடைத்தேர்தல் உள்ளிட்ட மூன்று தேர்தல்களில், வெற்றி பெற்று ரமேஷ் எம்.எல்.ஏ., ஆனார். கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பி.ஆர்.எஸ்., சார்பில் போட்டியிட்டு ரமேஷ் தோல்வி அடைந்தார்.இதற்கிடையே, ஸ்ரீனிவாஸ் தொடர்ந்த வழக்கில் 2020ல் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த விளக்க மனுவில், 'தேர்தல் விண்ணப்பத்தில் குடியுரிமை விவகாரத்தில் உண்மையை மறைத்ததன் காரணமாக, ரமேஷின் இந்திய குடியுரிமையை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது' என தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து ரமேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரின் ஜெர்மனி பாஸ்போர்ட் திரும்ப ஒப்படைக்கப்பட்டது தொடர்பான ஆவணத்தையும், அவர் ஜெர்மனி நாட்டு பிரஜை அல்ல என்பது குறித்த ஆவணத்தையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆனால், அந்த ஆவணங்களை அவர் தாக்கல் செய்ய தவறியதை அடுத்து, தெலுங்கானா உயர் நீதிமன்றம் நேற்று ரமேஷுக்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது; இதில், 25 லட்சம் ரூபாயை, தேர்தலில் தோல்வியடைந்த ஆதி ஸ்ரீனிவாசுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Madhavan
டிச 10, 2024 20:25

வேறு ஒரு நாட்டு குடியுரிமை பெற்ற ஒருவர் 4 முறை எம்.எல்.ஏ. வாக இருந்திருக்கிறார் எனில் உள்துறை அமைச்சரும், எலக்ஷன் கமிஷனரும் உச்ச நீதி மன்றத்தால் விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். இது ஒருவரின் அதுவும் உண்மையை மறைத்து தேர்தலில் போட்டியிட்டு 4 முறை எம்.எல்.ஏ. பதவியை வகித்த ஒருவரின் குடியுரிமை பற்றிய வழக்கு என்பதால் இதனை விசாரித்த உயர் நீதி மன்றம் வழக்கை உச்ச நீதி மன்றத்திற்கு மாற்றியிருக்க வேண்டாமா? வழக்கின் விசாரணை வேகமாக முடிக்கப்பட்டதும் தீர்ப்பில் குற்றத்திற்கான சிறைத் தண்டனை ஏதும் விதிக்கப்படவில்லை என்பதும், பதவியிழப்பும், வெறும் 30 லட்சம் அபராதம் மட்டும் சொல்லப்பட்டிருப்பதும் ஆச்சரியம் மட்டுமல்ல அதிர்ச்சியூட்டும் செய்தியும் கூட. சம்பந்தப்பட்ட நபர் நாடு கடத்தப்படவில்லை. இந்த வழக்கின் தீர்ப்பை முன்னுதாரணமாகக் காட்டி இதே போன்றே வேறு நாட்டு பிரஜையாகஒரு பாஸ்போர்ட்டும், இந்தியா நாட்டுப் பிரஜையாக ஒரு பாஸ்போர்ட்டுடன் யாராவது எம்.பி.யாகவோ, எம்.எல்.ஏ.ஆக இருக்கிறார்களா என்பதையாவது நம் நாட்டு நீதி மன்றங்கள் கேட்க வேண்டாமா? ஒருவேளை அப்படி ஒருவர் இருந்தாலும் இதுதான் தண்டனை எனில் சுலபமாக வெளி வந்து விடுவார்களே.. எனவே இது போன்ற குற்றங்கள் தேச துரோகக் குற்றங்களாகக் கருதப்பட்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு நம் நாட்டு நீதி மன்றங்கள் ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்.


sankar
டிச 10, 2024 09:02

அப்படின்னா - நம்ம பப்பு கதை என்னவாகும் சார்


ராமகிருஷ்ணன்
டிச 10, 2024 16:33

இவருக்கு கிடைக்கும் தண்டனை தான் பப்புவுக்கும் கிடைக்கும்.


அப்பாவி
டிச 10, 2024 07:35

முபது கட்சி ரூவா அபராதனாம். அவன் எம்.எக்.ஏ வா இருந்து முன்னூறு கோடி சம்பாரிச்சிருப்பானேடா? தீர்ப்பளித்த நீதிமன்றத்திடம் 10 பர்சண்ட் கேளிக்கை வரி வசூலிக்கணும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 10, 2024 07:34

கேசு நடந்துகொண்டிருக்கும்போதே நடந்த இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு வென்றுள்ளார் ..... பிறகு ஒரு சட்டமன்றத் தேர்தலில் தோற்றபொழுதுதான் விசாரணை முடிந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது ..... நாட்டின் சட்டங்கள் எந்த அளவுக்கு அரசியல்வாதிகள் விஷயத்தில் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றன என்பதற்கு ஒரு உதாரணம் ..... மக்கள் பிரதிநிதிகளைத் தட்டிக் கேட்கவே முடியாத நிலை .....


அப்பாவி
டிச 10, 2024 07:33

வெகங்கிடுவீங்க. ஃப்ராடுத்தனம் செஞ்ச அதே தெலுகுதேசம் நாயுடுதான் இன்னிக்கி அங்கே முதல்வர். 2009 ல தோற்றவனுக்கு நீர் எப்போடா கிடைக்கும்? 2047 லேயா?


Pandi Muni
டிச 10, 2024 10:04

அங்கிருந்து வந்த திராவிடனுங்க இங்கே இளிச்சிவாயன் தமிழனை ஏமாற்றி சொகுசா ஆட்சியில அமர்ந்து ஆட்டைய போட்டுக்கிட்டுருக்கானுங்க


Dharmavaan
டிச 10, 2024 07:13

இந்த கண்டனை போதாது மறுதேர்தல் செலவை இவன் க வேண்டும் இதுவரை பெற்றுவந்த சம்பளம் படிகளை வட்டியோடு வசூலிக்க வேண்டும்


Iyer
டிச 10, 2024 06:55

பப்புவை உடனே திஹாருக்கு அனுப்பணும். இதே காரணத்துக்கக


K.SANTHANAM
டிச 10, 2024 05:09

அப்ப இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ள ராகுல் காந்தி பாராளுமன்ற உறுப்பினராக ஏன் எதிர் கட்சி தலைவராக நீடிக்க ஏன் மத்திய அரசு அனுமதிக்கிறது ..உடனடியாக நீக்க வேண்டும்..


J.V. Iyer
டிச 10, 2024 04:30

இதற்கு சீக்கிரம் நீதி அளித்தவர்கள், ஏன் இன்னும் சோரஸ் தாசன், தேசவிரோதி, மற்றும் பயங்கரவாதி ராவுல் வின்சியின் இரட்டை பாஸ்ப்போர்ட்டுக்கு இழுத்தடிக்கிறார்கள்? பயமா? இல்லை வேறு ஏதாவது ....


Sambath
டிச 10, 2024 08:15

சரியான கேள்வி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை