உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முன்பு ‛பாரத் ஜோடோ: இனி ‛பாரத் டோஜோ : ராகுல் புது வழி

முன்பு ‛பாரத் ஜோடோ: இனி ‛பாரத் டோஜோ : ராகுல் புது வழி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாரத் ஜோடோ யாத்திரையின் போது, தற்காப்பு கலை பயிற்சி பெற்ற வீடியோவை வெளியிட்ட ராகுல், விரைவில் பாரத் டோஜா யாத்திரையை விரைவில் துவங்க உள்ளதாக கூறியுள்ளார். டோஜோ என்பதற்கு தற்காப்பு கலைக்கான பயிற்சிக்கூடம் என பொருள்படும்.‛எக்ஸ் ' சமூக வலைதளத்தில் ராகுல் வெளியிட்ட அந்த வீடியோவில் ஜப்பானின் ஐகிடோ மற்றும் பிரேசிலின் ஜியு - ஜிட்சு தற்காப்பு கலையை கற்றுக் கொள்வதுடன், அதனை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார். அப்போது, ஐகிடோவில் கருப்பு பெல்ட் எனவும், ஜியு - ஜிட்சுவில் நீல நிற பெல்ட் எனவும் கூறுகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=komxhjhg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இத்துடன் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பாரத் ஜோடோ ஒற்றுமை நீதிப் பயணத்தின் போது ஆயிரக்கணக்கான கி.மீ., பயணம் செய்ய வேண்டி இருந்தது. நாங்கள் தங்கும் முகாமில் தினமும் மாலையில் ஜப்பானியர்களின் தற்காப்புக் கலையான ஜியு - ஜிட்சு பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டு இருந்தோம். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நாங்கள் தங்கியிருந்த நகரங்களைச் சேர்ந்த இளம் தற்காப்புக் கலைஞர்கள் ஒன்றிணைந்து எங்களுக்கு உதவினர். மேலும், தியானம், ஜியு-ஜிட்சு, அயிகிடோ ஆகியவற்றுடன் வன்முறையற்ற தீர்வு தொழில்நுட்பத்தை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவதே எங்களின் நோக்கம். வன்முறையை மென்மையாக மாற்றுவதன் மதிப்பை அவர்களிடம் விதைப்பதையும் நோக்கமாக கொண்டோம். இரக்கமுள்ள மற்றும் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதற்கான கருவிகளை அவர்களுக்கு வழங்கினோம்.தேசிய விளையாட்டு நாளில், உங்களில் சிலரை இந்த கலை பயிற்சியில் ஈடுபட ஊக்குவிக்கும் நம்பிக்கையில், எங்கள் அனுபவத்தை உங்கள் அனைவருடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். குறிப்பு: பாரத் டோஜோ யாத்திரையை விரைவில் துவங்க உள்ளேன். இவ்வாறு அந்த பதிவில் ராகுல் கூறியுள்ளார்.கடந்த செப்.,2022 முதல் ஜன.,2023 வரையிலும், பிறகு ஜன.,14 முதல் மார்ச் 20 வரை மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் ஜோடோ நியாய யாத்திரையை ராகுல் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
ஆக 29, 2024 23:01

தினம் ஒரு சிரிப்பு. இன்று பாரத் டோஜோ ... சிரிப்பு வராவிட்டாலும் சிரித்துவிடுங்கள். ஏன் என்றால் சிரிப்பு ஒரு சிறந்த மருந்து ஸ்ட்ரெஸ்ஸுக்கு...


தாமரை மலர்கிறது
ஆக 29, 2024 19:44

பப்பு இனி ஜிகினா பப்பு என்று அன்புடன் அழைக்கப்படுவார்.


Vathsan
ஆக 29, 2024 19:39

அரசியல் வாதிகள், பிட்னெஸ் விஷயத்தில் ராகுல் காந்தியிடம் பாடம் படிக்க வேண்டும்.


ganapathy
ஆக 29, 2024 21:09

மூளையிலாம முட்டு கொடுத்தா இப்படித்தான் அறிவீலியே


ganapathy
ஆக 29, 2024 16:57

பாஜக தனது அரசியல் எதிரிகளை நிர்மூலம் செய்யாத ஆயிரம் பிற விஷயங்கள் செய்வதால் ஒரு பயனும் இல்லை என்பதை கடந்த பாராளுமன்ற தேர்தல்ல பாத்தாச்சு. காந்திகள் மீதான வழக்குகளில் தீர்ப்பு வந்து அவர்கள் சிறையிலிருந்தால் இன்னேரம் பாஜக வலுவான ஆட்சில இருந்திருக்க வாய்பிருந்தது. ஆனா பாஜக வழக்கம்போல அதை நழுவவிட்டது.


Sivasankaran Kannan
ஆக 29, 2024 16:52

இவர் பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மற்றும் சிறியா போன்ற நாடுகளுக்கே சென்று இந்த சேவையை செய்தால், நெறய வன்முறையாளர்கள் திருந்துவார்கள்.. அவர்களுக்கும் நல்லது, இந்த உலகிற்கும் நல்லது.. இந்தியாவில் இவை செல்லாது செல்லாது..


Sivak
ஆக 29, 2024 17:25

சேவையின் போது பாக்கிஸ்தான் ஜெயித்து விட்டால் இந்தியாவிற்கு நல்லது ...


ganapathy
ஆக 29, 2024 16:39

மிக சாதுரியமான முயற்சி. இது கட்டாயம் இளைய சமூகத்தை கவரும். அரிய விதத்தில் ராஹுல் நல்ல முயற்சியில் ஈடுபடுட்ள்ளார். பாஜக இப்பயாவது உருப்படியான எதிர் வினையாற்ற வேண்டும். இல்லையேல் 2029ல் சீமான் வைகோ ஆதரவு தேட வேண்டிவரும்.


Duruvesan
ஆக 29, 2024 17:35

நீ எப்பவும் போல விடியளுக்கே ஓட்டு போடு


சமீபத்திய செய்தி