இரண்டு கார்கள் மோதி 4 பேர் பலி
ஹாவேரி: இரண்டு கார்கள் மோதிக்கொண்டதில், ஒரே குடும்பத்தின் நால்வர் உயிரிழந்தனர்.ஹாவேரி, ஷிகாவியின் தடசா கிராஸ் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம், 12:00 மணியளவில் அதிவேகமாக சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பு மீது மோதி, பக்கத்து சாலைக்கு பாய்ந்தது. எதிரே வந்த சிவப்பு நிற கார் மீது மோதியது.இந்த காரில் இருந்த, பெங்களூரின் சாம்ராஜ்பேட்டையை சேர்ந்த சந்திரம்மா, 59. இவரது மகள் மீனா, 38, மகேஷ்குமார், 41, தன்வீர், 12, ஆகியோர் உயிரிழந்தனர். இவர்கள் ஹூப்பள்ளியில் இருந்து, பெங்களூருக்கு காரில் சென்றபோது விபத்து நடந்துள்ளது.மற்றொரு காரில் இருந்த ஓட்டுனர் உட்பட, இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தை எஸ்.பி., அம்ஷு குமார் பார்வையிட்டார்.சம்பவம் தொடர்பாக, தடசா போலீஸ் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.