நாய் குட்டிகள் திருடிய வழக்கில் 4 பேருக்கு தலா ஓராண்டு சிறை
மூணாறு; மறையூர் அருகே விலை உயர்ந்த நாய் குட்டிகளை திருடிய வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு தலா ஓராண்டு சிறை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.தமிழகம் தென்காசியைச் சேர்ந்த பாலமுருகன் 36, திண்டுக்கல்லைச் சேர்ந்த தமிழ்செல்வன் 24, மதுரைச் சேர்ந்த திலீப்குமார் 24, சிவகங்கையைச் சேர்ந்த சக்கரவர்த்தி 43, ஆகியோர் 2023 ஆகஸ்ட் 11ல், மூணாறு அருகே மறையூரில் சகாயகிரி பத்தடிபாலம் பகுதியில் ஒரு வீட்டில் திருடியதுடன், விலை உயர்ந்த இரண்டு நாய் குட்டிகளையும் திருடிச் சென்றனர். மறையூர் போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர். நான்கு பேருக்கு தலா ஓராண்டு சிறை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். வீட்டில் திருடியது தொடர்பான வழக்கில் தீர்ப்பு அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.