உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் சரிந்து விழும் நிலையில் 4 மாடி கட்டடம்: அப்புறப்படுத்தும் பணி தீவிரம்

டில்லியில் சரிந்து விழும் நிலையில் 4 மாடி கட்டடம்: அப்புறப்படுத்தும் பணி தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் சரிந்து விழும் நிலையில் நான்கு மாடி கட்டடங்கள் உள்ள நிலையில், அதனை அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.கிழக்கு டில்லியின் பிஹாரி காலனி ஷாஹ்தாராவில் உள்ள நான்கு மாடி கட்டடம் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நான்கு மாடி கட்டடத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் அருகில் இருக்கும் வீடுகளில் உள்ள மக்களை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.அப்பகுதிக்கு மக்கள் யாரும் செல்லாமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்பகுதிக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனைவரையும் அந்தப் பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். மாநகராட்சி அதிகாரிகள் ஆபத்தான நிலையில் இருக்கும் நான்கு மாடி கட்டடங்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கட்டடத்தை காலி செய்யுமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Akash
மே 16, 2025 17:37

What abt the people living in these houses after demolition? Govt should build these houses and give it back to the tenants free of cost


சிட்டுக்குருவி
மே 16, 2025 17:15

பல மாடி கட்டிடங்களுக்கு மூன்றோ அல்லது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறையோ கட்டிட வல்லுநர் சான்று அவசியமாக்கப்படவேண்டும் .சான்று தரும் வல்லுநர்கள் தங்களை அரசிடம் பதிவு செய்துகொள்ளும் வசதி ஏற்படுத்தவேண்டும்.


Nada Rajan
மே 16, 2025 15:13

மக்களுக்கு பாதிப்பு வராத வகையில் டெல்லி மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை