பெண்களுக்கு இலவச பஸ் பயணம் ஆந்திராவில் 15ல் அமலாகிறது
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
அமராவதி: ஆந்திராவில், 'ஸ்திரீ சக்தி' திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் திருநங்கையருக்கான இலவச பஸ் பயண திட்டம், வரும் 15ல் அமலுக்கு வருகிறது. 'ஸ்திரீ சக்தி' ஆந்திராவில் கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் - பா.ஜ., - ஜனசேனா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வராக தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளார். தேர்த ல் பிரசாரத்தின்போது, பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டம் அமல்படுத்தப்படும் என, தெலுங்கு தேசம் அறிவித்தது. அ தன்படி, பெண் களுக்கான இலவச பஸ் பயணத்துக்கான 'ஸ்திரீ சக்தி' திட்டம் வரும் 15ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து சாலைகள், போக்குவரத்து, கட்டடங்கள் துறை முதன்மை செயலர் காந்திலால் தாண்டே, அமராவதியில் நேற்று கூறியதாவது: மாநிலம் முழுதும் வசிக்கும் சிறுமியர், பெண்கள், திருநங்கையர் இந்த திட்டத்தின் வாயிலாக பயனடைய முடியும். திருநங்கையர் பயணத்தின் போது, தங்களின் அடையாள அட்டையை காண்பித்தல் அவசியம். பயணச்சீட்டு தற்போதுள்ள பஸ்களை வைத்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும். விரைவில், தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் வாங்கப்படும். இடைநில்லா சேவை, மாநிலங்களுக்கு இடையிலான சேவை, ஒப்பந்த வண்டிகள், குளிர்சாதன பஸ்கள், சப்தகிரி எக்ஸ்பிரஸ், அல்ட்ரா டீலக்ஸ், சூப்பர் லக்சரி, ஸ்டார் லைனர் போன்ற பஸ்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது. இலவச பயணம் செய்யும் பெண்களுக்கு அதற்கான பயணச்சீட்டு வழங்கப்படும். இந்த திட்டத்துக்கு ஆண்டுக்கு 1,942 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.