உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இலவசமா அல்லது சிறந்த வசதி வேண்டுமா: முடிவு மக்கள் கையி்ல் என்கிறார் நிதி கமிஷன் தலைவர்

இலவசமா அல்லது சிறந்த வசதி வேண்டுமா: முடிவு மக்கள் கையி்ல் என்கிறார் நிதி கமிஷன் தலைவர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பனாஜி: இலவசங்கள் வேண்டுமா அல்லது சிறந்த சாலைகள், மேம்பட்ட குடிநீர் வசதி, தரமான பாதாள சாக்கடை திட்டம் வேண்டுமா என்பதை குடிமக்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் என பொருளாதார நிபுணரும், 16வது நிதிக்குழு தலைவருமான அரவிந்த் பனகாரியா கூறியுள்ளார்.நிதிக்குழுவினர் கோவா மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினர். பிறகு அரவிந்த் பனகாரியா நிருபர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பல மாநில அரசுகள் உள்கட்டமைப்புக்கு ஒதுக்கப்படும் நிதியை இலவச திட்டங்களுக்கு பயன்படுத்துவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு அவர் அளித்த பதில்: ஒரு திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டால், அந்த நிதி அதற்கு தான் பயன்படுத்த வேண்டும். ஆனால், ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு இறுதி முடிவு எடுக்க வேண்டும். அந்த முடிவை நிதிக்கமிஷன் எடுக்க முடியாது. பொருளாதார ஸ்திரத்தன்மையை மனதில் வைத்து வேண்டுமானால், கேள்வி எழுப்பலாம். பொதுவாக எதுவும் கூறலாம். ஆனால், எதற்கு செலவு செய்ய வேண்டும் என மாநில அரசுகள் முடிவு எடுப்பதை கட்டுப்படுத்த முடியாது. இலவசங்களை அறிவித்த மாநில அரசுகளை மக்கள் தேர்வு செய்தால் அவர்களிடம் மக்கள் கேள்வி கேட்கலாம். ஆனால், சிறந்த வசதிகள், தரமான சாலைகள், மேம்பட்ட பாதாள சாக்கடை வசதிகள் வேண்டுமா அல்லது உங்கள் வங்கிக்கணக்கிற்கு வந்து சேரும் இலவசங்கள் வேண்டுமா என்பதை மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Subash BV
ஜன 11, 2025 14:18

NO CHOICE. POLITICIANS WILL FOOL THE PUBLIC EASILY BY Controlling THEM ECONOMICALLY AND MENTALLY IN ADDITION TO CURTAILING THEIR ACCESS TO RIGHT EDUCATION. SAMPLE. 100% CHILDREN NOT STUDYING IN THEIR MOTHER TONGUE. THIS CONTROLS THEIR KNOWLEDGE SPREAD. POLITICIANS KNOWS IT WELL. BE ALERT..


V GOPALAN
ஜன 11, 2025 11:38

தமிழ்நாடு அரசு கடன் வாங்கி 25 பைசா பெறுமானம் உள்ள கரும்பு இலவசமாக கொடுப்பதற்கு இரண்டு ரூபாய் செலவிடுகிறது என்பது வேதனையாக உள்ளது


Ram Moorthy
ஜன 11, 2025 06:54

படிக்காத படித்த மூடர் மக்கள் கூட்டம் இலவசம் வேண்டாமா என்ற கேள்வியா


மோகனசுந்தரம் லண்டன்
ஜன 10, 2025 09:02

நாங்கள் மறத்தமிழர் எங்களுக்கு இலவசம் தான் வேண்டும்


Kanns
ஜன 10, 2025 07:50

Punish them All


Kanns
ஜன 10, 2025 07:50

Freebies 90%


அப்பாவி
ஜன 10, 2025 07:35

இதை 2014 லேயே சொல்லியிருக்கணும். இத்தனை பா.ஜ வுக்கு சாமரம் வீசிட்டு இன்னிக்கி கேள்வி கேக்குறாரு. இலவசம் வேணாம். வீட்டுக்கு ஒரு ஆளுக்கு வேலை குடுப்பீரான்னா பனகாரியா ஃபணால். சாலை போடறாராம்.


Vasoodhevun KK
ஜன 11, 2025 06:58

கருத்து கண்ணாயிரம் நீங்கள் என்ன அறிவுக்கொழுந்தா? வருசம் ஒருலட்சம் பேங்க் அக்கவுண்ட்- ல படாபட் வந்துடும் னு இலவசத்தை அறிவித்த காங் கூட்டணி உபியில மண்ணை கவ்வியது அங்கே. நாம இங்க காசுக்கு ஓட்டப் போட்டு கடனை நம்ம வாரிசுகள் மேல ஏத்திட்டு போறாங்க. கடன் வாங்கி அத எதுக்கு உபயோகிக்கறாங்க அப்படிங்கறது முக்கியம். மத்திய அரசு வாங்கி பல திட்டங்களில முதலீடு செய்து இருக்கு. மிலிட்டரி தளவாட உற்பத்தி இதுவரை வெளிநாடுகளில் வாங்கிய நாம இதோ ஏற்றுமதி செய்யறோம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான சாலை போக்குவரத்து இதுமாதிரி முதலீடு செய்யறது. ஆனால் இங்கே இலவசத்தை கொடுத்து அத சமாளிக்க கடன்வாங்குது. எந்த மக்கள் இலவச த்தை நம்பி ஓட்டு போடறாங்களோ அந்த நாட்டின் மொத்த மக்கள் நிலையும் படுமோசமாக விரைவில் போகும். இலவசம் சலுகை தேவையான மக்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.


sankar
ஜன 11, 2025 07:33

தம்பி சூப்பர் இருநூறு.. இரண்டாயிரத்து பதினான்கிற்கும் இப்பவும் உள்ள ... டெவலப்மெண்டை யோசிச்சுபாரு ... சிந்திக்கும் திறனும், அறிவும் இருந்தால்.


Laddoo
ஜன 10, 2025 07:02

த்ரவிஷன்கள் இலவசமும் பணமும் கொடுத்து மக்களின் தலையில் மிளகாய் அரைக்க வேணும். மக்களுக்கு வோட்டுக்கு காசு கொடுத்தால் சரி. பழக்கி விட்டார்கள்.


Seshan
ஜன 10, 2025 06:27

Solution rests with Election Commission.


தாமரை மலர்கிறது
ஜன 10, 2025 03:28

எந்த இலவசமும் வேண்டாம். இலவசம் கொடுக்கும் அரசு ஒட்டு பிச்சையெடுத்து, மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றிவிடும்.


புதிய வீடியோ