ம.பி.,யில் தடம் புரண்ட சரக்கு ரயில்
அனுப்பூர்: மத்திய பிரதேசத்தின் அனுப்பூர் மாவட்டத்தில் உள்ள கோட்மா ரயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தா சைடிங் பகுதி நோக்கி நேற்று முன்தினம் இரவு, சரக்கு ரயில் சென்றது. அப்போது திடீரென அந்த ரயிலின் மூன்று பெட்டிகள் தடம்புரண்டன. இதனால் அத்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.