உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பில்கேட்ஸ் முதல் மார்க் ஜக்கர்பெர்க் வரை: ஆனந்த் அம்பானி திருமண விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள்

பில்கேட்ஸ் முதல் மார்க் ஜக்கர்பெர்க் வரை: ஆனந்த் அம்பானி திருமண விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட்டின் திருமண விழாவில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸ் முதல் மெட்டா நிறுவனத்தின் மார்க் ஜக்கர்பெர்க் வரை ஏராளமான உலக தொழிலதிபர்கள் பங்கேற்க உள்ளனர்.ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட்டின் திருமணம் வரும் ஜூலை 12ம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இதற்கான திருமண கொண்டாட்டங்கள், குஜராத்தில் ஜாம் நகரில் மார்ச் மாதம் துவங்க உள்ள நிலையில், உலக பணக்காரர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளன. இந்த நிகழ்ச்சியில், உலகளவிலான பிரபலங்கள், சிஇஓ.,க்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸ், மெட்டா சிஇஓ மார்க் ஜக்கர்பெர்க், டிஸ்னி சிஇஓ பாப் ஐகர், பிளாக்ராக் சிஇஓ லாரி பின்க், பிளாக்ஸ்டோன் சேர்மன் ஸ்டீபன், இவாங்கா டிரம்ப், மார்கன் ஸ்டான்லி சிஇஓ டெட் பிக், அமெரிக்க வங்கி சேர்மன் பிரையன் தாமஸ், கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி, டெக் முதலீட்டாளர் யூரி மைனர், அடோப் சிஇஓ ஷாந்தனு நாராயன், லூபா சிஸ்டம் சிஇஓ ஜேம்ஸ் முர்டாக், ஹில்ஹவுஸ் கேப்பிடல் பவுண்டர் ஜாங் லெய், பிபி தலைமை நிர்வாகி முரே, சிஸ்கோ முன்னாள் தலைவர் ஜான் சேம்பர், எக்சார் சிஇஓ ஜான் எல்கான், புரூக் பீல்ட் அசெட் நிறுவனத்தின் சிஇஓ புரூஸ் பிளாட், மெக்சிகன் பிசினஸ் மேக்னட் கரியோஸ் சிலிம், இன்சூரன்ஸ் ஆபரேஷன் துணை தலைவர் அஜித் ஜெயின், அட்நாக் சிஇஓ சுல்தான் அஹமது உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

தாமரை மலர்கிறது
பிப் 23, 2024 23:48

இந்தியாவின் பொருளாதார ரெண்டாம் தந்தை அம்பானி அவர்கள். முதல் தந்தை அதானி. இருவரும் இந்தியாவின் கண்களை திறந்து, அதன் பொருளாதாரவலிமையை உலகிற்கு உணர்த்தியவர்கள்.


தியாகு
பிப் 23, 2024 13:38

டுமிழன்களை பொறுத்தவரையில் அம்பானி, அதானி இவர்களெல்லாம் மோசமான கார்பொரேட் முதலாளிகள். ஆனால் இந்தியாவின் நாற்பதாவது பணக்காரர் மற்றும் டுமிழகத்தின் முதல் பணக்காரர் நம்ம கட்டுமர திருட்டு திமுகவின் பன் நெட்ஒர்க்கின் முதலாளி கேடி பிரதர்ஸ் பெட்டி கடை வைத்து பொறி உருண்டை வியாபாரம் செய்து படிப்படியாக முன்னேறிய மிக நல்ல கார்பொரேட் முதலாளி,. விளங்கிடும் டுமிழ்நாட்டின் எதிர்காலம்.


Barakat Ali
பிப் 23, 2024 11:59

அப்படியாவது இங்கே முதலீடுகள் அதிகரிக்கட்டும் ...........


Barakat Ali
பிப் 23, 2024 11:58

கடந்த முறை இவர் நமது சர்வாதிகாரியின் வீட்டுக்கே குடும்ப சமேதராகச் சென்று மகனின் திருமணத்துக்காக அழைப்பு விடுத்தார் ..... அம்பானி, அதானி என்று கூவும் திமுகவின் கூலிப்படைஸ் இதை நினைச்சு பார்க்கணும் .......


தியாகு
பிப் 23, 2024 11:42

அகில உலக துணை நடிகர் சூப்பர் ஸ்டார் உதைணா கலந்துகொள்வாரா மாட்டாரா?


Balasubramanian
பிப் 23, 2024 11:29

தேடிப் பார்த்தாலும் அங்கே அனில் அம்பானி குடும்பத்தினர் இருந்திருக்க மாட்டார்களே????


தியாகு
பிப் 23, 2024 12:38

கட்டுமர திருட்டு திமுகவின் தலைவரின் சொந்த பந்தங்கள் ஆந்திராவில் இன்னமும் பின்தங்கிய நிலையில் மேளம் வாசித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவரது குடும்பம் ஆசியாவின் பணக்காரர்கள் வரிசையில் சேர்ந்துவிட்டது. முதலில் நம் முதுகில் இருக்கும் அழுக்கை பார்க்கலாம், பிறகு ஆற அமர்ந்து உட்கார்ந்து இரண்டாயிரம் கிலோமீட்டர்கள் தாண்டி இருக்கும் அம்பானியையும் அதானியையும் உருட்டலாம்,


Vathsan
பிப் 23, 2024 15:54

உன் வீட்டுல தண்ணி வரலேன்னா கூட உதய அண்ணாதான் காரணம். எப்போ பாத்தாலும் DMK உதய அண்ணா.. BP ரொம்ப ஏறாம பாத்துக்கோடா தியாகு.


தியாகு
பிப் 23, 2024 22:06

சரி விடுங்க வத்சன், உங்களுக்கும் BP ரொம்ப ஏறுது போல, பார்த்து பத்திரமா இருந்துக்கோங்க. ஹி...ஹி...ஹி...


ராமு
பிப் 23, 2024 11:28

பில்கேட்சின் கூடாநட்பு அவரது விவாகரத்தில் முடிஞ்சிதுன்னு பேசிக்கிறாங்க.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை