உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடிப்படை உரிமையை பறிக்க முடியாது; புத்தாண்டு பிரார்த்தனை வழக்கில் ம.பி., ஐகோர்ட் உத்தரவு

அடிப்படை உரிமையை பறிக்க முடியாது; புத்தாண்டு பிரார்த்தனை வழக்கில் ம.பி., ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: 'தனது மத அடிப்படையில் ஒன்று கூடி பிரார்த்தனை செய்வது அரசியலமைப்பின் 25வது பிரிவின் கீழ் ஒருவரின் அடிப்படை உரிமை. மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்களின் ஆட்சேபனையின் அடிப்படையில் மட்டும் அதனை பறிக்க முடியாது' என ம.பி., ஐகோர்ட் கூறியுள்ளது.ம.பி., மாநிலம் ஜபுவா மாவட்டத்தில் கத்வாடா கிராமத்தில் புத்தாண்டை முன்னிட்டு, ஜன.,1ல் ஒன்று கூடி பிரார்த்தனை நடத்த கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரி மனு கொடுத்தார். முதலில் இதற்கு அனுமதி வழங்கிய மாவட்ட நிர்வாகம், பிறகு ஹிந்து அமைப்பினரின் ஆட்சேபனை காரணமாக அனுமதியை ரத்து செய்தது.இதனையடுத்து, அனுமதி கேட்ட நபர், ம.பி., ஐகோர்ட்டில், அரசியலமைப்பின் 226வது விதிகளின் கீழ் மனுத் தாக்கல் செய்தார். அதில், புத்தாண்டு தினத்தில் கிறிஸ்தவர்கள் ஒன்று கூடி பிரார்த்தனை நடத்த அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறப்பட்டு இருந்தது.இதனை விசாரித்த நீதிபதி சுபோத் அபயன்கர் பிறப்பித்த உத்தரவு: பிரார்த்தனை நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்த மனுதாரர், மாவட்ட நிர்வாகம் விதிக்கும் விதிமுறைகளின்படி நடந்து கொள்வதாக கூறினார். இதற்கு அனுமதி வழங்கிய மாவட்ட நிர்வாகம், ஹிந்து அமைப்பின் எதிர்ப்பு காரணமாக முன்னர் வழங்கிய அனுமதியை ரத்து செய்தது. ஆனால், இதற்கு முன்னர் மனுதாரரிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை.மனுதாரர், கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஆணடு துவக்கத்திலும் பிரார்த்தனை நடத்தி வருகிறார். இதற்கான ஆவணங்கள் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலைகளில், ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஆட்சேபனை தெரிவிக்கிறார் என்பதற்காக மட்டும், ஒரு இடத்தில் ஒன்று கூடி பிரார்த்தனை நடத்தலாம் என்ற அரசியலமைப்பின் 25வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட உறுதியை பறிக்க முடியாது. மாவட்ட கலெக்டர், மனுதாரரிடம் எந்த விளக்கமும் கேட்காமல், மற்றொரு மதத்தை சேர்ந்தவர் ஆட்சேபனை தெரிவிக்கிறார் என்பதற்காக மட்டும் முன்னர் வழங்கிய அனுமதியை ரத்து செய்துள்ளார். இதனால், மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம். பிரார்த்தனை கூட்டம் எந்த இடையூறும் இன்றி நடப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

subramanian
ஜன 06, 2025 07:39

பொதுவாக மக்கள் தூங்கும் நேரத்தில், எதற்காக இந்த கொண்டாட்டம்? இது British காரன் ஆண்டு. நம் நாட்டில் புத்தாண்டு பங்குனியில், சித்திரை மாதம் வருகிறது. நாம் நடு இரவில் யாரையும் thonthiravu செய்வதில்லை. நீதிபதிகள் மனசாட்சி படி நடந்து கொள்ள வேண்டும்


S.Martin Manoj
ஜன 06, 2025 19:02

என்னது நீங்கள் இரவில் யாரையும் யாரையும் தொந்தரவு செய்வதில்லயா உங்கள் ஊரின் திருவிழாக்களில் இரவு முழுவதும் பட்டாசு போடுகிறார்கள்,மைச்செட் வைத்து விடியவிடிய பாட்டு போடுகிறார்கள், தெரு தெருவாக மேளதாளத்துடன் சாமி ஊர்வலம் பொகுறீர்கள் இதெல்லாம் மற்றவர்களுக்கு தொந்தரவாகதனே இருக்கிறது.


தாமரை மலர்கிறது
ஜன 06, 2025 00:46

ஒன்று கூடி பிரார்த்தனை செய்கிறோம் என்ற பெயரில் விஷமப்பிரச்சாரம் செய்து வன்முறையை தூண்டினால், அது அடிப்படை உரிமை ஆகாது. வன்முறையை தூண்டுவது ஒருகாலத்திலும் அடிப்படை உரிமை என்று எடுத்துக்கொள்ள முடியாது. தீர்ப்பை மாத்துங்க நாட்டாமை


Ramesh Sargam
ஜன 05, 2025 20:18

பிரார்த்தனையோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். மதமாற்ற செயல்களில் இறங்கக்கூடாது.


GMM
ஜன 05, 2025 20:09

ஊர்வலம், மறியல், போராட்டம் வேறு . பொது வெளியில் ஒன்று கூடி மத பிராத்தனை நடத்துவது வேறு. மத மாற்றம் நிகழும். பிரச்னை உருவாகும். கிருத்துவ வழிபாட்டு ஸ்தலத்தில் பிரார்த்திப்பதை தடுக்க முடியாது. பிற மத ஆட்சேபனை கருத்தில் கொள்ளாமல், சுயமாக கலெக்டர் முடிவு எடுக்க வேண்டும். கலெக்டர் உத்தரவை நீதிமன்றம் கவர்னர் அனுமதி இல்லாமல், ரத்து செய்ய முடியாது. சட்டம் ஒழுங்கு பராமரிப்பு நீதிமன்றம் கிடையாது. உத்தரவும் பராமரிப்பும் ஒரு குடையின் கீழ் தற்போது இல்லை.


Barakat Ali
ஜன 05, 2025 19:05

குறிப்பிட்ட மதம்தான் அட்ஜஸ்ட் செஞ்சுக்கணும் ...... மற்ற மதங்கள் விருப்பம்போல செயல்படலாம் ...


பெரிய ராசு
ஜன 05, 2025 17:20

அதுக்குதான் நீ இருக்கின்றதே மூர்க்கன்ஸ் ஊர் ஊற குண்டுவைக்கும் ஸ்பிசியலிஸ்ட்


M Ramachandran
ஜன 05, 2025 15:54

சரியான தீர்ப்பு


தமிழன்
ஜன 05, 2025 15:42

ஒரு சங்கி கூட்டம் வந்து கதறுமே எங்கே இன்னும் காணோம் ???