உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மெட்ரோ திட்டத்துக்கு மத்திய அரசு 65 சதவீதம் நிதி; மத்திய அமைச்சர் நிர்மலா திட்டவட்டம்!

மெட்ரோ திட்டத்துக்கு மத்திய அரசு 65 சதவீதம் நிதி; மத்திய அமைச்சர் நிர்மலா திட்டவட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கான நிதியில் 65 சதவீதத்தை மத்திய அரசு வழங்குகிறது ,'' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கான மொத்த திட்ட மதிப்பீட்டுச் செலவு ரூ.63,246 கோடியில் 65 சதவீதத்தை மத்திய அரசு வழங்குகிறது. இத்திட்டத்தை, மத்திய அரசின் திட்டமாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. இதனால், பங்களிப்பும் உயர்ந்துள்ளது. இதுவரை 90 சதவீதம் அளவிற்கு மாநில அரசின் நிதியாக கொண்டு மாநில அரசின் திட்டமாக செயல்படுத்தப்பட்டது.தற்போது மத்திய அரசின் திட்டமானதால் ரூ.33,593 கோடி முழுக்கடனும். சமபங்கு, சார்நிலைக் கடனாக ரூ.7,425 கோடியும் அடங்கும். இரு தரப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து 32,548 கோடி கடனாக நிதி திரட்ட மத்திய அரசு உதவி செய்துள்ளது. எஞ்சிய 35 சதவீத மதிப்பீட்டுச் செலவுக்கு மாநில அரசு நிதியுதவி செய்யும். திரட்டிய கடனில் இதுவரை சுமார் ரூ.6,100 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.பன்னாட்டு, மேம்பாட்டு முகமைகளில் இருந்து பெறப்படும் கடன்கள், மாநில அரசுக்கானதாக இல்லாமல், மத்திய அரசின் கடனாக கருதப்படும். மத்திய அரசின் பட்ஜெட்டில் இருந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு நேரடியாக நிதி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

saravanan
அக் 06, 2024 22:01

மெட்ரொ போன்ற மிகப்பெரிய செலவு பண்ண வேண்டிய திட்டங்களுக்கு மாநில அரசோ, மத்திய அரசோ அல்லது இரண்டும் சேர்ந்து கூட்டாகவோ முதலீடு செய்யும்.யார் திட்டத்தை நிறைவேற்றினாலும் கடன் பெற்றே திட்டங்களுக்கு முதலீடு செய்வர். காரணம் பல ஆண்டுகள் நீடிக்க கூடிய கட்டுமானம் என்பதால் பணம் இருந்தாலும் அரசு செலவு செய்யாது தாத்தா செலுத்திய வரியை மகனுக்கோ, பேரனுக்கோ தாரை வார்க்க முடியாது. அவர்களும் கட்டுமானத்தில் பங்களிக்க வேண்டும்-எப்படி? கடன் வாங்கி திட்டத்தை நிறைவேற்றுவார்கள். அசல் மற்றும் வட்டியை மகனும், பேரனும் திரும்ப கட்டுவார்கள். அதற்காக திட்டம் முழுவதுமே கடனாக இருக்காது விகிதாசார அடிப்படையில் பங்களிப்பு இருக்கும் தற்போது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அறுபத்தைந்து சதவீத பங்களிப்பை வழங்க இருப்பது தமிழக மக்கள் மீது அவர் கொண்டுள்ள உண்மையான பற்றையும், நம்பிக்கையையும் காட்டுகிறது


Ram
அக் 05, 2024 22:20

அந்த 65% இல் தமிழ்நாடு மக்கள் வரிப்பணம் எவ்வளவு? அதையும் கொஞ்சம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டுகிறோம்.... மத்திய அரசின் ஜிஎஸ்டி வருமானத்தில் தமிழ்நாடு 3வது மாநிலம்


raja
அக் 06, 2024 08:28

அத தான் தமிழகத்தின் பங்குண்ணு இடனனி மத்திய அரசு தருதே... வேணு முன்னா GST கவுன்சில் இருக்கிற நிதி...கேளு...


ஆரூர் ரங்
அக் 06, 2024 12:06

நாட்டின் ஜிஎஸ்டி வசூலில் தமிழகத்துடைய பங்களிப்பு வெறும் ஐந்தரை சதவீதம்.போதுமா? ஐந்து துறைமுகங்கள் ஆறு விமான நிலைய வசதிகளை வைத்துக்கொண்டு இவ்வளவுதானா?


கிஜன்
அக் 05, 2024 21:18

என்னப்பா தேடுற ..... இங்க ஒருத்தங்க வந்து பைசா தரமாட்டேன்னு சொல்லிட்டு போனாங்க அவங்களைத்தான் ....


ஆரூர் ரங்
அக் 05, 2024 21:08

மத்திய திட்டம் என அறிவித்து விட்டதால் ஸ்டிக்கர் சரியாக ஒட்ட முடியாது. ஆனா காண்ட்ராக்ட் டில் ஒரு முக்கிய பகுதியை ஏற்கனவே அடானி சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு திமுக அரசு கொடுத்து விட்டதால் இனிமே முடிச்சு போட்டு பேச முடியாது.


Ramesh Sargam
அக் 05, 2024 21:05

மத்திய அரசு எவ்வளவு கொடுத்தாலும், கொடுக்கவில்லை என்று புலம்புவார்கள் தமிழக ஆட்சியாளர்கள். மேலும் கொடுக்கப்பட்ட நிதி எப்படி செலவழிக்கப்பட்டது என்றும் கூறமாட்டார்கள்.


venugopal s
அக் 05, 2024 20:27

இதிலும் ஏழாயிரத்து நானூற்று இருபத்தைந்து கோடி ரூபாய் மட்டுமே மத்திய பாஜக அரசின் பங்களிப்பு, மீதி எல்லாம் கடன் தான். அந்தக் கடனை சி எம் ஆர் எல் கட்டத் தவறினால் மாநில அரசு தான் பொறுப்பு.


ஆரூர் ரங்
அக் 05, 2024 21:11

வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் பெறப்படும் எல்லாக் கடன்களுக்கும் மத்திய அரசுதான் கியாரண்டி/ உறுதியளிக்கிறது.ஸ்டிக்கர் சரியா ஒட்டல. பிஞ்சு போச்சு .


Kumar Kumzi
அக் 05, 2024 19:51

ஓசிகோட்டர் கொத்தடிமைக்கு பிச்சை கிடைத்தால் அர்த்தராத்திரியிலும் குடை பிடிப்பான்னு பழமொழி உண்டு


Dharmavaan
அக் 05, 2024 19:49

எதற்கு இந்த அறிவிப்பு எதற்கு பங்கு ஒன்றும் புரியவில்லை. மிரட்டியவுடன் தருவது கேவலம் மக்கள் நம்பிக்கையை பிஜேபி இழக்கும்


சாண்டில்யன்
அக் 05, 2024 19:42

எதையும் மூடு மந்த்ரமாகத்தான் சொல்வாராகள் வெளிப்படைத் தன்மையிருக்கவேயிருக்காது இது புதிதாக உள்ளது


சீதாபதி
அக் 05, 2024 19:31

இவிங்கதான் நிதி கிடையாதுன்னு போனமாசம் கை விரிச்சாங்க. ஏதோ உள்குத்து நடந்து நிதி கிடைச்சுருச்சு. இவிங்க உபகாரம் ஒண்ணும் கிடையாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை