உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விநாயகர் சிலைகளை நீர் தொட்டிகளில் தான் கரைக்கணும்: கோர்ட் உத்தரவு

விநாயகர் சிலைகளை நீர் தொட்டிகளில் தான் கரைக்கணும்: கோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில், விநாயகர் சிலைகள் கரைப்பு தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றம் முக்கியமான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதன்படி, '6 அடி உயரம் வரையிலான அனைத்து விநாயகர் சிலைகளும் நீர் தொட்டிகளில் தான் கரைக்கப்பட வேண்டும்' என, உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுதும் ஆக., 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி முழுவீச் சில் நடந்து வருகிறது. குறிப்பாக மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா, தொடர்ந்து 10 நாட்கள் வரை கொண்டாடப்படும் என்பதால், பிரமாண்ட விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், விநாயகர் சிலைகள் கரைப்பு தொடர்பாக முக்கிய உத்தரவை மும்பை உயர் நீதிமன்றம் நேற்று பிறப்பித்தது. அதன் விபரம்: விநாயகர் சிலைகளை நீராதாரங்களில் கரைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை முற்றிலும் தடுக்க வேண்டும் என்பதில் நீதிமன்றம் உறுதியுடன் உள்ளது. எனவே, 6 அடி உயரம் வரை உள்ள விநாயகர் சிலைகளை கரைக்க நீர் தொட்டிகளை கட்டாயம் அமைக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பின்பற்றப்படுவதை மாநில அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் தவறாமல் உறுதிசெய்ய வேண்டும். இந்த உத்தரவு அடுத்த ஆண்டு மார்ச் வரை அமலில் இருக்கும். விநாயகர் சிலைகளை தயாரிக்க பயன்படும், 'பிளாஸ்ட்டர் ஆப் பாரிஸ்' மூலப்பொருளை எந்த வகையில் மறுசுழற்சி செய்ய முடியும் என்பதை ஆராய, நிபுணர் குழுவை அரசு அமைக்க வேண்டும். அந்த குழு, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் சிலைகளை எப்படி கரைக்க வேண்டும் என்ற அறிவியல்பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்வது அவசியம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

J.Isaac
ஜூலை 25, 2025 15:01

அயோக்கிய மக்கள் மத்தியில் படும் பாடு , பாவம்.


c.mohanraj raj
ஜூலை 25, 2025 10:42

இந்துக்களின் விழாக்கள் என்றால் மட்டும் வரிசை கட்டி வந்து விடுவார்கள் அரசு போலீசார் மற்றும் நீதிமன்றங்கள் எத்தனை மனு கொடுத்து இருப்பார்கள் ஆற்றில் சாயக் கழிவு கலக்கிறது என்று காவிரியில் இரண்டு மாதங்களுக்கு முன் குளித்தவர்கள் அனைவருக்கும் தோல் அரிப்பு ஏற்பட்டது இது எதனால் விநாயகரை கரைத்ததால ஹிந்துக்கள் விழாக்கள் என்றால் மட்டுமே பணம் புழங்கும் நிறைய பேர் பயனடைவார்கள் முஸ்லிம் விழாக்கள் கரிய எடுப்பார்கள் அவர்களே சமைத்து சாப்பிடுவார்கள் துணி எடுப்பார்கள் அவ்வளவுதான் கிறிஸ்தவர்களும் அப்படித்தான் ஆனால் ஹிந்துக்கள் அப்படியல்ல ஒருவர் கோயிலுக்கு செல்கிறார் என்றாலே சூடம் பத்தி தேங்காய் பழம் பூ என்று அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் பலன் இருக்கும்


sribalajitraders
ஜூலை 25, 2025 09:56

நல்ல தீர்ப்பு


sankaranarayanan
ஜூலை 25, 2025 09:53

விநாயகர் சிலைகளை தயாரிக்க பயன்படும், பிளாஸ்ட்டர் ஆப் பாரிஸ் மூலப்பொருளை பயன்படுத்தினால் ஆறு குளங்களில் சிலைகளை கரைக்க கூடாது என்றே சொல்லலாம் அதைவிட்டுவிட்டு முழுவதும் விநாயகர் சிலைகளை ஆற்றிலோ குளங்களிலோ தொன்றுதொட்டு கரைக்கும் பழக்கத்தை மாற்ற சொல்லி நீதிமன்றம் தடை விதிப்பது சரி அல்ல. நாளைக்கு மக்களையே ஆற்றிலோ குளத்திலோ குளிக்கவும் கூடாது என்றே சட்டம் கொண்டுவந்தாலும் வரலாம் இது இந்திய நாட்டின் நீதி மன்றகளின் அழகு திறமை புத்திசாலித்தனம் இறையாண்மையை அழிக்கும்


Thirumal Kumaresan
ஜூலை 25, 2025 09:36

கோர்ட் இதையும் இந்தியாவில் சிந்திக்க வேண்டும், அனைத்து கழிவுகளும் கறியாக சுத்திகரிக்கபடுகிறதா அல்லது கடலிலும் ஆறுகளிலும் கலக்கபடுகிறதா என்று, எல்லாவகை கெளசிகளும் ஹிந்துக்கள் விழாக்களில் மட்டும் கட்டுபடுத்த கூடாது,


Barakat Ali
ஜூலை 25, 2025 08:56

விநாயகரையே கேட்டு முடிவெடுக்கலாம் ...... நல்ல தீர்வா கொடுப்பாரு ..........


Iyer
ஜூலை 25, 2025 08:35

• சாஸ்திரப்படி விநாயக சிலைகள் களிமண்ணால் மட்டுமே செயப்படவேண்டும்.. •POP அல்லது வேறு எந்த ரசாயனங்கள் கொண்டு கடவுள் சிலைகள் செய்யக்கூடாது. •இந்த காலத்தில் எல்லாமே வணிக சம்பந்தம் ஆகிவிட்டன. ராசயங்கள் உபயோகத்தை உடனே தடை செய்யவேண்டும்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 25, 2025 06:23

அனைத்து ஊர்களிலும் நீர் வழி தடங்களை மறைத்து உள்ளூர் சாலைகள் அமைத்து விட்டார்கள். தற்போது உள்ளூர் ஏரிகளில் அந்த ஊரில் உள்ள அனைத்து கழிவு நீர் களையும் தேக்கும் இடமாக மாற்றி விட்டார்கள். இதனை சரிசெய்ய நிபுணர் குழுவை அமைத்து தீர்வு காண உத்தரவு இட வேண்டும் யுவர் ஆனர். கிரடாய் அமைப்பை அழைத்து இனிமேல் எங்கு மனைப்பிரிவுகள் அடுக்கு மாடி குடியிருப்பு அமைத்தாலும் கழிவு நீர் மேலாண்மை அமைப்பு கட்டாயம் அமைத்து சுத்தப் படுத்தப் பட்ட கழிவுநீரை பாலங்கள் கட்டுமானத்தில் சிமெண்ட் குயூரிங் பயன்படுத்த உத்தரவு இட வேண்டும். சாலைகள் நடுவில் வைத்துள்ள செடிகளுக்கு நீர் பாய்ச்ச உத்தரவு இட வேண்டும். அனைத்து அடுக்கு மாடி குடியிருப்புகளும் சொந்தமாக பூங்காக்களை உருவாக்கி சுத்தப் படுத்தப் பட்ட கழிவுநீரை அங்கு உள்ள செடிகளுக்கு பயன்படுத்த உத்தரவு இட வேண்டும் யுவர் ஆனர். ஆக்கிரமிப்பு செய்து நீர்வழி தடங்களை சாலைகளாக மாற்றிய இடங்களில் குழாய்கள் அமைத்து மழைநீர் ஏரிகளில் தேக்க அரசுக்கு உத்தரவு இட வேண்டும். இதனை செய்தால் எங்கள் பேரப் பிள்ளைகள் கொள்ளு பேரப் பிள்ளைகள் 21 தலைமுறை மக்கள் மகிழ்ச்சியாக நன்றியுடன் இருப்பார்கள் யுவர் ஆனர்.


D Natarajan
ஜூலை 25, 2025 05:31

நல்ல உடைவு. இதே போல கழிவு நீரை ஆற்றில் ஏரிகளில் விடக்கூடாது என்று உத்தரவு போடுவார்களா


Kasimani Baskaran
ஜூலை 25, 2025 03:52

சாலையில் கார் ஓடுவதால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுகிறது - பொது மக்களில் ஒரு சிலருக்கு பயித்தியம் கூட பிடிக்கிறது - ஆகவே நீதிமன்றம் கார்களை எல்லா இடத்துக்கும் அனுமதிக்கக்கூடாது.