உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கியில் ரூ.12 கோடி நகை, பணம் கொள்ளை துப்பாக்கி, ஆயுதங்களை காட்டி கும்பல் அட்டூழியம்

வங்கியில் ரூ.12 கோடி நகை, பணம் கொள்ளை துப்பாக்கி, ஆயுதங்களை காட்டி கும்பல் அட்டூழியம்

மங்களூரு:கர்நாடகா மாநிலம் பீதரில் ஏ.டி.எம்.,மிற்கு பணம் நிரப்பச் சென்ற, ஏஜென்சி ஊழியரை சுட்டுக் கொன்று 93 லட்சம் ரூபாய் நேற்று முன்தினம் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் சுவடு மறைவதற்குள், கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவிலும் பெரிய கொள்ளை நடந்துள்ளது.தட்சிண கன்னடாவின் உல்லால் தாலுகா கே.சி.ரோடு கோட்டேகார் பகுதியில் கூட்டுறவு வங்கி உள்ளது. நேற்று காலை 10:00 மணிக்கு அலுவலகத்திற்கு வந்த ஊழியர்கள் வழக்கம்போல தங்களது பணியை செய்தனர். மதியம் 1:30 மணிக்கு வாடிக்கையாளர்கள் யாரும் இன்றி, வங்கி ஊழியர்கள் மட்டும் இருந்தனர். அப்போது வங்கிக்குள் வந்த நான்கு பேர் கும்பல், திடீரென துப்பாக்கி, ஆயுதங்களை காண்பித்து ஊழியர்களை மிரட்டியது. நேராக லாக்கர் இருக்கும் வங்கியின் மாடிக்குச் சென்ற கும்பல், லாக்கரில் இருந்த நகை, பணத்தை கொள்ளை அடித்து காரில் தப்பிச் சென்றது. இந்த ஒட்டுமொத்த சம்பவமும் ஆறு நிமிடங்களில் நடந்து முடிந்தது.தகவல் அறிந்த சபாநாயகர் காதர், உல்லால் போலீசார் வங்கிக்கு சென்று, ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். வங்கியில் இருந்து 10 - 12 கோடி ரூபாய் மதிப்பிலான, நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரிந்தது. கொள்ளையர்கள் சென்ற கார், மங்களூரு பக்கம் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், காரின் பதிவெண்ணை வைத்து போலீசார் விசாரித்தனர். ஆனால் பதிவெண் போலியானது என்று தெரிந்தது. இதற்கிடையில் அந்த கார், தளபாடி சுங்கச்சாவடியை தாண்டி, கேரளாவின் காசர்கோடு பக்கம் சென்றது உறுதியாகி உள்ளது. இதனால் கொள்ளையர்களை தேடி, போலீசார் கேரளாவுக்கு சென்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை