உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண் டாக்டர் டிஜிட்டல் அரெஸ்ட்; ரூ.3 கோடி அபேஸ் செய்த கும்பல்

பெண் டாக்டர் டிஜிட்டல் அரெஸ்ட்; ரூ.3 கோடி அபேஸ் செய்த கும்பல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில், 'டிஜிட்டல் அரெஸ்ட்' முறையில் 70 வயது பெண் டாக்டரிடம் 3 கோடி ரூபாய் மோசடி செய்த குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.மஹாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில், 70 வயது பெண் டாக்டர் தன் கணவருடன் வசித்து வருகிறார். கடந்த மாதம் இவரது மொபைல் எண்ணிற்கு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர் தன்னை தொலைத்தொடர்பு ஊழியர் அமித் குமார் என அறிமுகம் செய்து கொண்டார். டாக்டரின் பெயரில் உள்ள சிம் கார்டு வாயிலாக, குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதை கண்டறிந்ததாக தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து மற்றொரு எண்ணில் இருந்து குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி சமதன் பவார் என்ற பெயரில் பெண் டாக்டரிடம் ஒருவர் பேசினார். அப்போது, பணமோசடி வழக்கில் சிக்கிய விமான நிறுவன உரிமையாளர் வீட்டில் நடத்திய ரெய்டில் தங்களின் வங்கி விபரங்கள், டெபிட் கார்டு உள்ளிட்டவை கைப்பற்றியதாக தெரிவித்தார். அத்துடன், அதுதொடர்பான சி.பி.ஐ., அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அமைப்புகளின் உண்மையான ஆவணங்கள் போன்றவற்றை பெண் டாக்டருக்கு அடுத்தடுத்து அனுப்பினார்.இதனால் அதிர்ச்சியில் இருந்த டாக்டரின் மொபைல் போனிற்கு, வீடியோ அழைப்பு வாயிலாக மற்றொரு நபர் பேசினார். போலீஸ் சீருடையில் பேசிய அந்நபர், குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்பதை போல் பெண் டாக்டரை நம்ப வைத்துள்ளார். இதையடுத்து, அவரை டிஜிட்டல் அரெஸ்ட் செய்ததாகவும், ஒவ்வொரு மணி நேரமும் தங்கள் முன் வீடியோ கால் வாயிலாக ஆஜராக வேண்டும் எனவும் மிரட்டியுள்ளார்.இதனால் அச்சம் அடைந்த டாக்டர், அந்நபரின் அறிவுறுத்தலின்படி தொடர்ந்து எட்டு நாட்கள் அதேபோல் இருந்துள்ளார். அப்போது, அவர்கள் அளித்த பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மூன்று கோடி ரூபாயை டாக்டர் அனுப்பினார். ஏமாற்றப்பட்டதை தாமதமாக அறிந்த டாக்டர், மும்பை சைபர் கிரைம் போலீசில் சமீபத்தில் புகார் அளித்தார்.இதன்படி வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், 82 லட்சம் ரூபாயை கிரிப்டோகரன்சியாக அக்குற்றவாளி மாற்றியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, சைபர் மோசடியில் ஈடுபட்ட நபர்களை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Padmasridharan
ஜூன் 29, 2025 08:31

குற்றம் செய்யலைன்னா எதுக்கு பயந்து பணம் தராங்க. காவலர் சீருடை போட்டு ஏமாத்தறாங்கன்னா அந்த உடையில்தானே அவங்க மத்தவங்கள ஏமாத்தி பணத்தை புடுங்கறாங்க. அவங்க மானத்தை அவங்களே பலரும் இப்படி மாமூல் குற்றங்கள் செய்வதனால்தான் மத்த குற்றவாளிகளும் சீருடைக்கு மதிப்பில்லாம பண்ணிட்டாங்க..


VENKATASUBRAMANIAN
ஜூன் 29, 2025 08:24

இதை முதலிலேயே செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை