உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2025 , ஜன.01 முதல் பொது சிவில் சட்டம் அமல் : உத்தரகண்ட் அரசு அறிவிப்பு

2025 , ஜன.01 முதல் பொது சிவில் சட்டம் அமல் : உத்தரகண்ட் அரசு அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டேராடூன் : சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக, அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை உத்தரகண்ட் மாநில அரசு வரும் ஜன.01 2025-ம் ஆண்டு முதல் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.யு.சி.சி., எனப்படும் பொது சிவில் சட்டம். திருமணம், விவாகரத்து, நிலம், சொத்து மற்றும் பரம்பரை சொத்துகளில் பங்கு உள்ளிட்டவற்றில், அனைத்து மதங்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வருவோம் என பா. ஜ.,தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. அக்கட்சி ஆட்சி செய்யும் உத்தரகண்ட் மாநில பா.ஜ., முதல்வர் புஷ்கர் சிங் தாமி , ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழுவை அமைத்தார்.அந்த குழு அளித்த வரைவு பரிந்துரைகளின் அடிப்படையில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற அம்மாநில சட்டசபையின் சிறப்பு கூட்டத் தொடரின் போது பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட பின், கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்நிலையில் இச்சட்டம் வரும் 2025ம் ஆண்டு ஜன.-01-ம் தேதி முதல் உத்தரகண்ட் மாநிலம் முழுதும் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

AMLA ASOKAN
டிச 19, 2024 08:06

பொதுமக்களின் தேவைக்கான, பாதுகாப்புக்கான கிரிமினல் சட்டங்கள் கடுமையாக உள்ளன. தங்களது மதத்திற்கான சிவில் சட்டங்களால் பாதிக்கப்பட்டதாக எந்த ஒரு முஸ்லிமோ, அல்லது எந்த ஒரு முஸ்லீம் அமைப்போ குரல் கொடுக்கவே இல்லை. இத்தனை ஆண்டுகளாக இச்சட்டங்களை பின்பற்றும் முஸ்லிம்களுக்கு இத்தகு சட்டங்களால் எந்த பயனும் இல்லை . பிஜேபியினர் தான் முன்னின்று முஸ்லிம்களின் வெறுப்பை சம்பாதிக்க விரும்புகின்றனர் .


ஆரூர் ரங்
டிச 19, 2024 10:38

இந்தியாவிலுள்ள குடியுரிமை பெற்ற சிறுபான்மையினருக்கு இந்த சட்டம் பொருந்தாதே. அண்டை நாடுகளிலிருந்து குடியேற விரும்பும் மக்களுக்கு மட்டுமே இது கொண்டு வரப்படுகிறது. இங்குள்ளவர்கள் கள்ளக் குடியேறிகளுக்காக குரல் கொடுப்பதேன்? ஊட்டி வளர்க்கும் தாய்நாட்டின் மீது தேசப்பற்று குறைவுதான் காரணம்.


Kasimani Baskaran
டிச 19, 2024 06:25

மதசார்பற்ற நாட்டில் ஏன் ஒவ்வொரு மதத்துக்கும் தனி சட்டம். ஒன்று போதாதா


Ganesh Kumar
டிச 19, 2024 03:28

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உடனடியாக அமல் படுத்த வேண்டிய சட்டம் செய்வார்களா, அனைத்து மாநில அரசுகளும்?


Visu
டிச 18, 2024 23:36

சூப்பர்... வெரி good ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை