உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு ஆயுள்

சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு ஆயுள்

பலியா:தலித் சிறுமியைக் கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்த 22 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பலியா அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சச்சின் ராஜ்பர்.22. கடந்த ஆண்டு செப்.6ல் அதே ஊரைச் சேர்ந்த 16 வயது தலில் சமூக சிறுமியைக் கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார்.சிறுமியின் தந்தை கொடுத்த புகார்படி போக்சோ மற்றும் ஜாதி வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சச்சினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு பலியா மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி பிரதான் காந்த் முன் விசாரணைக்கு வந்தது. குற்றவாளி சச்சின் ராஜ்பருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 40,000 ரூபாய் அபராதம் விதித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ