உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 20 மணி நேரத்துக்கு பின் மாணவி மீட்பு

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 20 மணி நேரத்துக்கு பின் மாணவி மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துமகூரு, கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டம், சிவராம்புரா கிராமத்தை சேர்ந்தவர் ஹம்சா, 20. சித்தகங்கா கல்லுாரியில் பி.டெக்., படிக்கும் இவர், ஹாஸ்டலில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் ஞாயிறு விடுமுறை என்பதால், இவரும், அவரது தோழி கீர்த்தனாவும், மந்தாரகிரி அருகில் உள்ள மைதாள ஏரிக்கு சுற்றுலா சென்றனர். சமீப நாட்களாக தொடர் மழை பெய்ததால், ஏரி நிரம்பி மடை திறக்கப்பட்டு வெள்ளம் பாய்கிறது. தோழியர் இருவரும் கரையில் நின்று மொபைல் போனில், 'ரீல்ஸ்' செய்தனர்.மடை மீது நின்று ஹம்சா, 'செல்பி' எடுத்தபோது தவறி விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். பீதியடைந்த தோழி, போலீசாருக்கும், ஹம்சாவின் தந்தை சோம்நாத்துக்கும், மொபைல் போனில் தகவல் தெரிவித்தார்.அங்கு வந்த போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் ஹம்சாவை தேடத் துவங்கினர். நீரின் வேகம் அதிகமாக இருந்ததால், மீட்புப் பணிக்கு இடையூறு ஏற்பட்டது. இரவு 8:00 மணி வரை தேடிய மீட்பு படையினர், இருளானதால் பணியை நிறுத்தினர்.நேற்று காலை 7:00 மணிக்கு, கிராமத்தினர் உதவியுடன் மீண்டும் தேடும் பணி துவக்கப்பட்டது. 'ஹம்சா உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. உடலை மீட்கலாம்' என, நினைத்து தொடர்ந்து தேடினர். ஆச்சரியப்படும் வகையில், 10 முதல் 20 அடி ஆழத்தில் ஒரு பாறை இடுக்கில் சிக்கியிருந்த ஹம்சா, நேற்று மதியம் 12:00 மணியளவில், உயிருடன் மீட்கப்பட்டார். கிட்டத்தட்ட, 20 மணி நேரமாக பாறை இடுக்கில் அவர் சிக்கியிருந்துள்ளார்.ஹம்சா கூறுகையில், ''பாறை இடுக்கில் சிக்கியதால். யாராவது வந்து காப்பாற்றுவர் என, நம்பினேன். காலுக்கு கீழே தண்ணீர் பாய்ந்தது. இரவு முழுதும் மண்டியிட்டபடி அமர்ந்து இருந்தேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Sivaprakasam Chinnayan
அக் 29, 2024 20:18

Vidya payalunga


Anand
அக் 29, 2024 11:56

இனிமேலாவது தாய் தந்தையரை நினைத்து அவர்கள் சொல்படி கேட்டு வாழ பழகிக்கொள்ளுங்கள்...


Ramesh Sargam
அக் 29, 2024 13:11

முதலில் இந்த செல்பி விளையாட்டை அவர்கள் நிறுத்தவேண்டும்.


Kumar Kumzi
அக் 29, 2024 10:05

எங்க விடியாத விடியல் ஐயாவுக்கும் செல்ஃபி மோகம் இருக்குங்க இனிமே போகும் போது அவரையும் கூட்டிட்டு போங்க


Nagarajan D
அக் 29, 2024 09:11

ரீலிஸ் மோகம் எங்கே கொண்டு சேர்த்திருக்கிறது ? இயற்கையை ரசிக்கலாம் தேவையில்லாத ரீலிஸ் எதற்கு?


வாய்மையே வெல்லும்
அக் 29, 2024 07:45

ஜலகண்டேஸ்வர அவார்ட் இந்த பெண்மணிக்கு கர்நாடக காங்கிரஸ் கவர்ன்மென்ட் கொடுத்து கௌரவிக்கலாம். அடுத்தமழை வெள்ளம் எப்போது என தெரிவித்துவிட்டால் இன்னொருமுறை குலஃபீ ஐஸ் உரிஞ்சிட்டு மங்குனி தோழிகள் சகாக்கள் உடன் இன்னொரு குலஃபீ செலஃபீ க்கு அவங்க ரெடி. மீட்புப்பணி வீரர்களே நீங்க ரெடியா ?


Mani . V
அக் 29, 2024 06:07

செல்பி மோகம் என்னவெல்லாம் செய்கிறது?


Kasimani Baskaran
அக் 29, 2024 05:18

ரீல்ஸ் மரணத்தின் விளிம்பு வரை கொண்டு சென்றுள்ளது. ஆபத்தை அறிந்தும் தெனாவெட்டாக ரீல்ஸ் எடுத்த தோழிக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.


Smart Indian
அக் 29, 2024 05:00

கடவுள் கொடுத்த மறுபிறவி.


சம்பா
அக் 29, 2024 04:06

உன் விதி அப்படி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை