உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; விசாரிக்க சிறப்பு குழு அமைத்தது உச்சநீதிமன்றம்!

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; விசாரிக்க சிறப்பு குழு அமைத்தது உச்சநீதிமன்றம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. சிறப்பு புலனாய்வு குழு தினம் தோறும் விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த, 10 வயது சிறுமிக்கு, பக்கத்து வீட்டைச் சேர்ந்த வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இச்சம்பவம் குறித்து, அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார் முதலில் புகாரை ஏற்க மறுத்துள்ளனர். இது குறித்து, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. சி.பி.ஐ., விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர். இது தொடர்பாக, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: * சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டால் அடுத்த 5 அல்லது 7 ஆண்டுகள் கூட, வழக்கு முடிய ஆகலாம். வழக்கை தமிழக போலீசாரே விசாரிக்கலாம்.* ஒரு வாரத்திற்கு ஒரு முறை விசாரணை என்ன கட்டத்தில் இருக்கிறது என்ற விவரத்தை உயர்நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணை குழு சமர்ப்பிக்க வேண்டும்.* சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்த வழக்கிற்கான சிறப்பு அமர்வை அமைக்க வேண்டும்.* சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. * சிறப்பு புலனாய்வு குழு தினம் தோறும் விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தாமரை மலர்கிறது
நவ 18, 2024 22:28

தமிழக அரசை கலைத்தால், சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்படும்.


Ramesh Sargam
நவ 18, 2024 21:01

சிறப்பு குழு அமைத்து, விவாதங்கள் நடந்து, தீர்ப்பு வருவதற்குள் என்னவெல்லாமோ நடந்திடும். வழக்கில் சம்பந்தப்பட்டவர்களே இருப்பார்களோ என்பதுகூட சந்தேகம்.


Sudha
நவ 18, 2024 18:00

மானமுள்ளவர்கள் இந்நேரம் பதவியை ராஜினாமா செய்து இருப்பார்கள்


அப்பாவி
நவ 18, 2024 16:14

ஒரு மாசத்துக்குள்ளாற விசாரிச்சு தீர்ப்பளிப்போம்னு சொல்ல மாட்டீங்களா? சாவகாசமா 7,8 வருசமாகும்னு நிச்சயமா சொல்றீங்களே. 2047 க்குள்ளாற தீர்ப்பளிப்போம்னு சொல்லுடுங்க. காத்திருக்கோம்.


duruvasar
நவ 18, 2024 14:49

சிபிஐ விசாரித்து முடிய 7, 8 வருடங்கள் ஆகும், சரியாய் சொன்னீங்க அதுபோக . சிபிசிஐடி யிடம் கொடுத்தால் எத்தனை ஜென்மங்கள் ஆகும் என சொல்வீர்களா எசமான் . தப்ப எடுத்துக்கிடக்கூடாது எசமான்


ஆரூர் ரங்
நவ 18, 2024 12:08

CBI விசாரிக்கக் கூடாது என பல லட்சம் செலவழித்து தமிழக அரசு அப்பீல். தவறு செய்தவர்கள் தமிழக காவல்துறை ஆட்கள். அவர்களை ஏவல் துறையை வைத்து விசாரித்தால் புஸ்வாணம் ஆகி விடாதா? டெல்லி யிலும் அயலக அணி உள்ளதா? தமிழக காவல்துறை எத்தனை ஊழல் வழக்குகளை விரைவில் முடித்திருக்கிறது


Anand
நவ 18, 2024 12:02

போலீஸ் சரியாக விசாரிக்கவில்லை என்பதால் தான் CBI க்கு உத்தரவிட்டார்கள், நீங்கள் மீண்டும் போலீஸ் விசாரிக்கட்டும் என்கிறீர்கள், அதற்கு பதில் பாலியல் வன்கொடுமை செய்தவனையே விசாரிக்க உத்தரவிடலாம்......... நீங்களும் உங்கள் தீர்ப்பும்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை